நீட்யு.ஜி.ரீஃபண்ட்விவகாரத்தில்,இன்று (ஜூலை 7-க்குள்) வங்கிகணக்குவிவரங்களைபுதுப்பிக்கமாணவர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளங்கலைத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, முறைகேடு காரணமாக தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்பட்டது.
எனினும் ஏற்கெனவே முதல் தேர்வுக்கு அவர்கள் செலுத்திய முன்பணத் தொகையை திரும்பப் பெறும் நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன. இதில் எந்தவிதமான தாமதமும் ஏற்படாமல் இருக்க, மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை வரும் ஜூலை 7ம் தேதிக்குள் உடனடியாகப் புதுப்பிக்குமாறு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இன்று இரவு 11.50 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இப்போது அவகாசம்?
பல நேரங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது பயன்படுத்திய வங்கி கணக்குகள் தற்போது செயல்பாட்டில் இல்லாமல் இருக்கலாம் அல்லது கணக்கின் பரிவர்த்தனை வரம்புகள் காரணமாக பணம் திருப்பி அனுப்பப்படுவதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் எழலாம். சிலர் இணைய மையங்களில் இருந்து பணம் செலுத்தியிருப்பார்கள், இதனால் ரீஃபண்ட் தொகை அந்த மையத்தின் கணக்கிற்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது போன்ற குழப்பங்களைத் தவிர்க்கவே, தற்போதைய மற்றும் சரியான வங்கி விவரங்களை பதிவு செய்ய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரீஃபண்ட் பெறத் தகுதியான மாணவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உள்நுழைந்து, தங்களது வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு மற்றும் கணக்குதாரரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் துல்லியமாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால், மாணவர் அல்லது பெற்றோரின் பெயரில் தற்போது செயல்பாட்டில் உள்ள சரியான வங்கி கணக்கை அப்டேட் செய்து கொள்ளலாம்.
ரீஃபண்ட் தொகை கைக்கு வந்து சேர்வதில்
இன்று இரவு வரை மட்டுமே இணையதளத்தில் இந்த மாற்றங்களைச் செய்ய முடியும். அதன் பிறகு எந்தவொரு திருத்தங்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான அல்லது முழுமையற்ற வங்கி விவரங்களை அளித்தால் ரீஃபண்ட் தொகை கைக்கு வந்து சேர்வதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.
எனவே, மாணவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது வங்கி விவரங்களைச் சரிபார்த்து உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
