2025ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வு ஆன்சர் கீ எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்று இந்தத் தேர்வு அழைக்கப்படுகிறது.
கடந்த மே 4ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5 வரை நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் 500 நகரங்களில் 5,453 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 22.7 லட்சம் தேர்வர்கள், இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். பேனா - காகித முறையில் ஒரே ஷிஃப்ட்டில் நீட் தேர்வு நடந்தது.
தேர்வர்கள், neet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து, நீட் தேர்வுக்கான ஆன்சர் கீயைப் பெறலாம். அதேபோல வினாத் தாள்கள், தற்காலிக விடைக் குறிப்பு ஆகியவற்றை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட உள்ளது.
விடைக் குறிப்பை ஆட்சேபிப்பது எப்படி?
தேர்வர்கள் தங்களின் விடைக் குறிப்பை, 200 ரூபாய் செலுத்தி குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஆட்சேபிக்கலாம். எனினும் இந்தப் பணம் திரும்பித் தரப்பட மாட்டாது.
தொடர்ந்து பாட வல்லுநர்கள் ஆட்சேபனைகளை மதிப்பாய்வு செய்வார்கள். அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் விடைக் குறிப்பு திருத்தி அமைக்கப்பட்டு, இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்பட்டது.
நீட் இளங்கலைத் தேர்வு ஆன்சர் கீ-யைப் பெறுவது எப்படி? (NEET UG Answer Key 2025: How to download)
- தேர்வர்கள் தேசியத் தேர்வுகள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள NEET UG answer key இணைப்பை க்ளிக் செய்து, ஆன்சர் கீயைப் பெறலாம்.
- லாகின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.
- அனைத்தையும் சமர்ப்பித்து, ஆன்சர் கீயைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
முழு விவரங்களுக்கு: neet.nta.nic.in