இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (NEET UG - 2026) மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்வுக்கான, தேர்வு மைய நகரங்கள் குறித்த முன் அறிவிப்பு சீட்டு (Advance Intimation Slip), இன்று (ஜூன் 7ஆம் தேதி) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுவிவரங்கள்
நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இந்த நீட் மறுதேர்வு ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் இத்தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கம்போல மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை நேரடியாக காகிதம் மற்றும் பேனா முறையில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுமையநகரவிவரங்களைபெறுவது எப்படி?
மாணவர்கள் தங்களின் தேர்வு மையம் எந்த ஊரில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட எளிய வழிமுறைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்:
- முதலில் NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள 'Examination City Intimation slip for NEET(UG)-2026' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்களின் விண்ணப்ப எண் (Application Number), பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு குறியீடு உள்ளிட்ட நுழைவு விவரங்களை (Login credentials) சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.
- இப்போது திரையில் தோன்றும் தேர்வு மைய நகர விவரங்கள் அடங்கிய சீட்டைப் பதிவிறக்கம் செய்து, சரிபார்த்துக் கொள்ளவும்.
ஹால் டிக்கெட் எப்போது?
தற்போது வெளியாகியிருப்பது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடையாது. மாணவர்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வதற்காக, தேர்வு மையம் எந்த ஊரில் அமைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கும் முன் அறிவிப்பு மட்டுமே இது.
தேர்வு மையத்தின் முழு முகவரி அடங்கிய அதிகாரப்பூர்வ ஹால் டிக்கெட் பின்னர் தனியாக வெளியிடப்படும். தேர்வு நடப்பதற்கு சில நாட்கள் முன்பு ஹால் டிக்கெட்
இந்த தேர்வு மைய சீட்டைப் பதிவிறக்கம் செய்வதில் மாணவர்களுக்கு ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சிரமங்கள் ஏற்பட்டால், NTA உதவி மைய எண்களான 011-40759000 அல்லது 011-69227700 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும், neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விவரங்களை அனுப்பி உதவி பெறலாம். தொடர் அறிவிப்புகளுக்கு NTA இணையதளங்களை மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
