இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET UG 2026) நுழைவுத் தேர்வு இன்று (மே 3) நடைபெறும் நிலையில், முக்கிய வழிகாட்டுதல்களை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. சுமார் 2 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ள நிலையில், 23 லட்சம் பேர் போட்டி போடுகின்றனர். தமிழ்நாட்டில் 30 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நாளன்று கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க, இந்த விதிமுறைகளை மாணவர்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமாகும். 

Continues below advertisement

தேர்வுமையத்திற்குச்செல்லும்நேரம்

மாணவர்கள் தங்கள் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்தை அடைவது பாதுகாப்பானது. காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்குச் செல்லத் தொடங்கலாம். மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு அறைக்குச் செல்ல வேண்டும்.

அதன் பிறகு, நுழைவு வாயில் மூடப்படும். பிறகு வரும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு சரியாக மதியம் 2.00 மணிக்குத் தொடங்கும்.

Continues below advertisement

எடுத்துச்செல்லவேண்டியஆவணங்கள்

  1. தேசியத் தேர்வுகள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டு கட்டாயம். அதில் மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் மற்றும் பெற்றோரின் கையொப்பம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  2. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அசல் அடையாள அட்டை (ஆதார்அட்டை, பான்கார்டு, வாக்காளர் அட்டை அல்லது பாஸ்போர்ட்).
  3. வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்காகக் கூடுதலாக பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  4. மாற்றுத்திறனாளி மாணவர்களாக இருந்தால், அதற்கான உரிய மருத்துவச் சான்றிதழ்.
  5. வெளிப்படையான (Transparent) தண்ணீர் பாட்டில் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும்.

தடைசெய்யப்பட்டபொருட்கள்

மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ப்ளூடூத் கருவிகள், இயர்போன்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை. பென்சில் பாக்ஸ், கால்குலேட்டர், காகிதத் துண்டுகள் மற்றும் தடிமனான ஆபரணங்கள் போன்றவற்றை அணிந்து செல்லக் கூடாது.

ஆடைக்கட்டுப்பாடு தளர்வு

மாணவர்கள் எளிமையான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். முழுக்கை சட்டை அணிந்து வர அனுமதி இல்லை. ஷூக்களுக்குப் பதிலாக, சாதாரண செருப்புகளை அணிந்து வருவது கட்டாயமாகும். எனினும் மத ரீதியான உடைகளை அணியும் மாணவர்கள், முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வந்து, உரிய சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இந்த விதிமுறைகளை மீறும் மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், தேர்வு மையத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தேர்வை நடத்தும் என்டிஏ தெரிவித்துள்ளது.