மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளங்கலை 2026 தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. மருத்துவக் கலந்தாய்வுக் குழு இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை தனது இணையதளத்தில் விரைவில் வெளியிட உள்ளது.

Continues below advertisement

மாணவர்கள்என்ன செய்யவேண்டும்?

கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, மாணவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் தயாராக வைத்துக்கொள்வது அவசியம். நீட் அட்மிட் கார்டு, மதிப்பெண் சான்றிதழ், 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள், அடையாளச் சான்று (ஆதார் அல்லது பான் கார்டு) மற்றும் இட ஒதுக்கீடு கோருபவர்கள் அதற்கான சாதிச் சான்றிதழ் ஆகியவற்றைச் சரியாக வைத்திருக்க வேண்டும்.

கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதுஎப்படி?

கலந்தாய்வு தொடங்கியதும் மாணவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்ய வேண்டும்:

Continues below advertisement
  1. தேர்வர்கள் MCC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/-க்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் உள்ள NEET UG 2026 Counselling Registration என்ற இணைப்பைக் கிளிக் செய்யவேண்டும்.
  3. உங்களுடைய நீட் ரோல் எண், கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
  4. கேட்கப்பட்டுள்ள சுய விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  5. இறுதியாக, ஆன்லைன் மூலமாகக் கலந்தாய்வுக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சாய்ஸ்லாக்கிங் 

பதிவு செய்த பிறகு, மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளின் முன்னுரிமைப் பட்டியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், அதனை சாய்ஸ் லாக்கிங் செய்ய வேண்டும்.

இடஒதுக்கீடுநடைமுறை

மாணவர்கள் பெற்ற நீட் தரவரிசை, அவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகளின் முன்னுரிமை, இட ஒதுக்கீடு விதிமுறைகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும்.

கலந்தாய்வு சுற்றுகள் வாரியாக நடைபெறும். கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள், எம்சிசி இணையதளத்தில் இருந்து அலாட்மெண்ட் ஆர்டரைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று சான்றிதழ் சரிபார்ப்பை முடித்துச் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.