இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவு (NEET UG 2026) தேர்வுக்கான விடைக்குறிப்பு (Answer Key) அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 552 தேர்வு மையங்களில் 22.80 லட்சம் மாணாக்கர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் இருந்து 1.4 லட்சம் பேர் எழுதினர்.

தேர்வர்கள் இந்த விடைக் குறிப்பை, நீட் தேர்வை நடத்திய தேசியத் தேர்வுகள் முகமை இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

காண்பது எப்படி?

  • தேர்வர்கள் நீட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/  என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்
  • அதில் முகப்புப் பக்கத்தில் உள்ள "NEET Provisional Answer Key 2026" என்ற தெரிவை க்ளிக் செய்யவும்
  • விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு அல்லது பிறந்த தேதியை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும்.
  • ஸ்க்ரினில் ஆன்சர் கீ மற்றும் ரெஸ்பான்ஸ் ஷீட் தோன்றும்.
  • எதிர்கால பயன்பாட்டுக்காக பிடிஎஃப் கோப்பை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும்.

ஆட்சேபனை செய்யலாம்

வெளியிடப்பட்டுள்ள விடைக் குறிப்பு தற்காலிகம்தான். இந்த விடைக் குறிப்பில் குறிப்பிட்ட விடைகள் குறித்து தேர்வர்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது அதிருப்தி இருந்தால், அவர்கள் அதனை சவால் செய்ய முடியும்.

இதற்காக, தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான இணையதள சாளரம் (Objection Window) தற்போது திறக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்யலாம்.

சந்தேகங்களைத் தீர்க்க: 011-40759000 / 011-69227700

இ மெயில் முகவரி: neetug2026@nta.ac.in

நீட் தேர்வு முறை எப்படி?

நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. குறிப்பாக, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும், பிரிவு A-வில் இருந்து 35 கேள்விகளும், பிரிவு B-யில் உள்ள 15 கேள்விகளில் இருந்து மொத்தம் 10 கேள்விகளும் இடம்பெறும்.

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வில் தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண் அளிக்கப்படும். குறிப்பாக ஒரு தவறான பதிலுக்கு, மதிப்பெண்ணில் நான்கில் ஒரு பங்கு, அதாவது ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.