NEET UG 2025: எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு: மருத்துவ கனவு நனவாகுமா? புதிய கல்லூரிகள், கூடுதல் இடங்கள்- விவரம்!
தமிழ்நாட்டில் உள்ள தக்ஷஷிலா தனியார் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் 50 மருத்துவ இடங்களை கூடுதலாக அளிக்க உள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 812 மருத்துவக் கல்லூரிகளில் 9,075 இடங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றத்தின் மூலம், 2024- 25ஆம் கல்வியாண்டில் 1,17,750 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் மொத்த எண்ணிக்கை, தற்போது 2025-26 கல்வியாண்டில் 1,26,600 ஆக உயர்ந்துள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எங்கெங்கே புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் மருத்துவ இடங்கள்?
மேற்கு வங்காளத்தில் ராணிகஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (100 இடங்கள்) மற்றும் பி.கே.ஜி மெடிக்கல் சயின்ஸ் (50 இடங்கள்) என இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில், தன்னாட்சி மாநில மருத்துவக் கல்லூரி (அரசு) 100 இடங்களுடன் 2025-26 கல்வியாண்டில் திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான்
தமிழ்நாட்டில் உள்ள தக்ஷஷிலா தனியார் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் 50 மருத்துவ இடங்களை கூடுதலாக அளிக்க உள்ளது. ராஜஸ்தானில், ESIC மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஆர்யா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (AMCH), ஓமேக்ஸ் சிட்டி ஆகியவை அரசு மற்றும் தனியார் பிரிவுகளின் கீழ் தலா 50 இடங்களைச் சேர்க்கும்.
மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர்
மத்தியப் பிரதேசத்தின் ESIC மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்தூர் 50 இடங்களைக் கூடுதலாகச் சேர்க்கும், அதே நேரத்தில் நேதாஜி சுபாஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, செரைகேலா (ஜார்கண்ட்) மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு நிறுவனம் (ஜம்மு காஷ்மீர்) முறையே 100 மற்றும் 50 இடங்களைச் சேர்க்கும்.
அதிகரிக்கப்பட்ட மருத்துவ இடங்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- மாணவர்கள், org.in என்றஅதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப்பார்வையிடவும்.
- முகப்புப் பக்கத்தில், "What's New" பிரிவின் கீழ் "MBBS Seat Matrix as on Oct 13" என்பதைக் கிளிக் செய்யவும்.
- புதுப்பிக்கப்பட்ட இட பட்டியல் தானாகவே பதிவிறக்கப்படும். அல்லது https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/13102025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்தும், பட்டியலைக் காணலாம்.
- எதிர்கால குறிப்புக்காக அதைச் சேமிக்கவும்.
இந்த பட்டியலில் AIIMS மற்றும் JIPMER மருத்துவ இடங்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






















