நீட் இளங்கலை நுழைவுத் தேர்வை எழுத உள்ள தேர்வர்கள், தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே (மார்ச் 11) கடைசித் தேதி ஆகும். குறிப்பாக மார்ச் 11ஆம் தேதி இரவு 11.50 மணி வரை திருத்தம் செய்யலாம். இதற்கு மேல் தேர்வர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய முடியாது.
விண்ணப்பங்களில் திருத்தம் செய்வது எப்படி?
- தேர்வர்கள் நீட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.
- அதில், நீட் 2025 முன்பதிவு பக்கத்தைத் திறக்கவும்.
- விண்ணப்ப திருத்தப் படிவத்தை க்ளிக் செய்யவும்.
- தேவையான மாற்றங்களைச் செய்து, ஆதார் வெரிஃபிகேஷனைச் செய்யவும்.
- சேமித்துக் கொள்ளவும்.
- விண்ணப்ப திருத்த படிவத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
எதிலெல்லாம் திருத்தம் செய்யலாம்?
- தேர்வரின் சமூகம் (Candidate Category)
- தேர்வரின் உப பிரிவு Candidate Sub-category (PwD)
- தேர்வு மொழி (Exam Medium)
- தேர்வு மையம் (Exam City)
- Qualification Details (தகுதி விவரம்)
- புகைப்படம் (Photograph)
எதில் எல்லாம் மாற்றம் செய்ய முடியாது?
NEET விண்ணப்பப் படிவம் 2025-ல் பின்வரும் விவரங்களைத் திருத்த முடியாது:
- மொபைல் எண்
- மின்னஞ்சல் முகவரி
- நிரந்தர முகவரி
- தற்போதைய முகவரி
- அவசர தொடர்பு விவரங்கள்
இதற்கான விண்ணப்பக் கட்டணம் எப்படி?
பொதுவாக விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் செய்ய கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. எனினும் சமூகப் பிரிவை மாற்றும்போதோ, சர்வதேச தேர்வு மையத்தைத் தேர்வு செய்யும்போதோ கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.
அவ்வாறு கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருந்தால், கிரெடிட் கார்டு, டெபிட் காட்ரு, நெட் பேங்க்கிங் அல்லது யூபிஐ மூலம் செலுத்தலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/03/2025030619.pdf