நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 19 அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல நீட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு நாளை (ஆகஸ்ட் 15-ம் தேதி) வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.  ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. 


இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. விண்ணப்பிக்காத தேர்வர்களுக்கு 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் நீட் தேர்வு விண்ணப்பங்களில் ஜூன் 16 வரை திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த முறை ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 


இளங்கலை நீட் தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 18,72,329 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். குறிப்பாக 8,07,711 ஆண் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். அதேபோல பெண் தேர்வர்கள் 10,64,606 பேர் விண்ணப்பித்தனர். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்தனர். தமிழ்நாட்டில் 1.42 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். 


கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2,57,562 பேர் அதிகமாக விண்ணப்பித்தனர். இதில் தமிழில் தேர்வெழுத 31,803 பேர் விண்ணப்பித்தனர். தேர்வர்கள்  ஜூலை 12 முதல்ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்தனர். இவர்களுக்கு ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 18 லட்சம் தேர்வர்கள், அதாவது 95 சதவீதம் பேர் நீட் தேர்வை எழுதி இருந்தனர். 




கூடுதல் விவரங்களுக்கு: neet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து பார்க்கலாம்.


கடந்த ஆண்டு, பொதுப்பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் 720-ல் இருந்து 138 வரை இருந்தது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 137 முதல் 108 வரை இருந்தது. 


முன்னதாக நாட்டின் உயர் கல்வி ஆணையமான யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் இணைத்து, ஒரே நுழைவுத் தேர்வாக நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண