மருத்துவப் பள்ளிக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) சார்பில், டாக்டர் ஆஃப் மெடிசின் (DM), Master of Chirurgiae (MCh) மற்றும் டாக்டர் ஆஃப் நேஷனல் போர்டு (DrNB) ஆகிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET SS) விவரங்கள் தொடங்கியுள்ளன.

Continues below advertisement

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு (NEET-SS)

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு என்பது தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 இன் பிரிவு 61(2) இன் படி, பல்வேறு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சேர்க்கைக்கான ஒற்றை நுழைவுத் தேர்வாக பரிந்துரைக்கப்பட்ட, தகுதி மற்றும் தரவரிசைத் தேர்வாகும்.

இந்திய மருத்துவ கவுன்சில் திருத்தச் சட்டம், 2016 இன் படி, மாநில அல்லது நிறுவன அளவில் வேறு எந்த நுழைவுத் தேர்வும் DM/ MCh மற்றும் DrNB சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான சேர்க்கைக்கு செல்லாது.

Continues below advertisement

மருத்துவப் பள்ளிக்கான தேசிய தேர்வு வாரியம், இந்தத் தேர்வுக்கான விரிவான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும் பிற விவரங்களை அறிந்துகொள்ளவும் natboard.edu.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

முக்கியத் தேதிகள் இதோ

  • விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: நவம்பர் 25, 2025 வரை.
  • தகவல்/ ஆவணங்களை திருத்த கடைசித் தேதி: நவம்பர் 28 முதல் 30 வரை.
  • புகைப்படங்கள், கையொப்பங்கள் மற்றும் பெருவிரல் அடையாளங்களை திருத்தும் சாளரம்: டிசம்பர் 12 முதல் 14 வரை. இதற்குப் பிறகு தகவல்களைத் திருத்த எந்த வாய்ப்பும் வழங்கப்படாது.

அதேபோல எந்தெந்தத் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்த தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜனவரி 2026 இறுதிக்குள் வெளியாக உள்ளன.

  • பதிவுக் கட்டணம்: ரூ.3500
  • தேர்வு நடைபெறும் இடங்கள்:இந்தியா முழுவதும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

அங்கீகரிக்கப்பட்ட முதுகலை மருத்துவப் பட்டம்/ தற்காலிக தேர்ச்சிச் சான்றிதழ் (MD/ MS/ DNB) அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அல்லது சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான தகுதியான ஸ்பெஷாலிட்டி தகுதிகளின்படி 31.01.2026-க்குள் அதைப் பெற வாய்ப்புள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

என்ன தகுதி?

தேர்வர்களில் 50வது பெர்சென்டைல் அல்லது அதற்கு மேல் உள்ள விண்ணப்பதாரர்கள் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் விண்ணப்பதாரர்களால் அளிக்கப்பட்ட பதில்களுக்கு மறுமதிப்பீடு அல்லது மறுபரிசீலனை அல்லது மொத்த மதிப்பெண் மறுபரிசீலனை இருக்காது. மறுமதிப்பீடு மற்றும் மொத்த மதிப்பெண் மறுபரிசீலனைக்கான கோரிக்கைகள் மற்றும் கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: https://natboard.edu.in/