தேசியத் தேர்வு முகமை 2026ஆம் ஆண்டு நீட் மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளையும், தேர்வு மைய விவரங்களையும் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் வசதிக்காகவும், போலிச் செய்திகளைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வவாட்ஸ்அப்எண்விவரம்
மாணவர்களுக்குத் தேர்வு குறித்த அப்டேட்டுகளை வழங்க +91 78279 80287 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை என்டிஏ வெளியிட்டுள்ளது. 'National Testing Agency' என்ற பெயருடன் ப்ளூ டிக் இருப்பதை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். நீல நிற டிக் இல்லாத எண்களில் இருந்து NTA என்ற பெயரில் வரும் செய்திகள் அனைத்தும் போலியானவை என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முக்கியஅறிவுறுத்தல்கள்
- ஒருவழித்தகவல்தொடர்பு: இந்த வாட்ஸ்அப் எண் தகவல்களைத் தெரிவிக்க மட்டுமே (Broadcast-only) பயன்படுத்தப்படும்.
- மோசடிஎச்சரிக்கை: என்டிஏ ஒருபோதும் மாணவர்களிடம் குறுஞ்செய்திக்கு பதிலளிக்கும்படியோ, ஓடிபி, தனிப்பட்ட விவரங்கள் அல்லது கட்டணம் செலுத்துமாறோ கேட்காது.
- வினாத்தாள்கசிவுவதந்திகள்: தேசியத் தேர்வு முகமை எந்தச் சூழ்நிலையிலும் வினாத்தாள்கள், விடைக் குறிப்புகள் அல்லது கசிந்ததாகக் கூறப்படும் தேர்வுப் பொருட்களை வாட்ஸ்அப்பில் அனுப்பாது. அவ்வாறு வரும் செய்திகள் முற்றிலும் மோசடியானவை.
நுழைவுச்சீட்டுவிவரம்
நீட் மறுதேர்வுக்கான புதிய நுழைவுச்சீட்டுகளை http://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை தாங்களே நேரடியாக டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் லிங்குகளை நம்ப வேண்டாம். மேலும், கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான பழைய நுழைவுச்சீட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகாரளிக்கும்முறை
பணம் கேட்டு மிரட்டுதல் அல்லது வினாத்தாள் தருவதாகக் கூறி வரும் சந்தேகத்திற்கு இடமான மோசடி குறுஞ்செய்திகள் குறித்து மாணவர்கள் உடனடியாக புகாரளிக்கலாம்.
இதற்கு http://innovateindia.mygov.in/neet-ug-2026 என்ற இணையதளத்தையோ, 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணையோ அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளலாம் என தேசியத் தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
