தேசிய மருத்துவ கல்வி தேர்வு வாரியம் முதுநிலை நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது.

Continues below advertisement


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,



  • எம்எஸ்/ எம்டி/ பிஜி டிப்ளமோ ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வாக முதுநிலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

  • 2025ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி கணினி அடிப்படையிலான தளத்தில் இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும்.

  • இந்த தேர்வுக்கு இன்று அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி மதியம் 3 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.

  • முதுநிலை நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://natboard.edu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • மாணவர்கள் மே 7 ஆம் தேதி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை நீட் தேர்வுக்கான முடிவுகளை ஜூலை 15ஆம் தேதிக்குள் வெளியிட தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.


எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?



  1. https://natboard.edu.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

  2. அதில் Examination என்பதில் NEET-PG என்பதை கிளிக் செய்யவும்.

  3. ஏப்ரல் 17 மதியம் 3 மணிக்கு Information Bulletin மற்றும் Application Link வெளியிடப்படும்

  4. அதனை கிளிக் செய்து தேவையான தகவல்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

  5. தேர்விற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

  6. பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்துகொள்ளவும்.