2026ஆம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவப் படிப்புத் தேர்வு நடைபெறும் தேதிகளை மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தேர்வு தேதிகள் என்ன?

இதன்படி, முதுகலை நீட் தேர்வு 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல முதுகலை எம்டிஎஸ் தேர்வு, மே 2ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரு தேர்வுகளும் நாடு முழுவதும் கணினி முறையில் நடைபெற உள்ளன.

அதேபோல வாரியம் இண்டர்ன்ஷிப் காலத்துக்கும் அவகாசம் அளித்துள்ளது. இதன்படி எம்டிஎஸ் படிப்புக்கு மே 31, 2026 வரையும் நீட் பிஜி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை https://natboard.edu.in/viewNotice.php?NBE=Vmpnd2Y3amF1TXRacVd5ci9pQ3lHUT09 என்ற இணைப்பில் முழுமையாக அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதில் தேர்வர்களுக்கு சந்தேகங்கள், குழப்பங்கள், கேள்விகள் இருந்தால் https://exam.natboard.edu.in/communication.php?page=main என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் படிப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2025ஆம் ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வு கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நடந்தது.

கூடுதல் தகவல்களுக்கு: natboard.edu.in