NEET PG Preponed: மருத்துவ படிப்புகளுக்கான நீட் முதுநிலை தேர்வு வரும் ஜூன் 23 முன்கூட்டியே நடத்தப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
NEET-PG என்பது தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019ன் கீழ் பல்வேறு MD/MS மற்றும் PG டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான ஒற்றை நுழைவுத் தேர்வாகும்.
இந்த தேர்வானது வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் என தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த தேர்வானது, முன்கூட்டியே ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என மாற்றப்பட்டுள்ளது.
இந்த முடிவானது, முதுகலை மருத்துவ கல்வி வாரியம், சுகாதார அறிவியல் இயக்குநரகம் மற்றும் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முக்கியமான தேதிகள்:
தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 23
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் : ஜூலை 15
கவுன்சிலிங் : ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 15
கல்லூரி திறப்பு : செப்டம்பர் 16
கல்லூரிகளில் சேர்வதற்கான கடைசி தேதி : அக்டோபர் 21
ஜூலை 7 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் 23 ஆம் தேதி முன்கூட்டியே நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தேர்வர்கள் தேர்வுக்கு தயாராவதற்கான காலம் குறைந்துள்ளது.
Also Read: TN TRB SGT: 1768 பணியிடங்கள்- இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?