எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு..

Chennai Job Fair 2021 : 22 முதல் 35 வயதுவரை உள்ள வேலைதேடும் இளைஞர்கள்  இதில் கலந்துகொள்ளலாம்

Continues below advertisement

ஏப்ரல் 26 தேதியன்று நடக்க இருந்த பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் அடுத்த அறிவிப்பு வரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26 (திங்கட்கிழமை) அன்று காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தலைமை இயக்குநரகம், 56, குயில் தோட்டம் சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை (மாநில வேலைவாய்ப்பு கட்டிடம், மூன்றாவது மாடி) வளாகத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.   

Continues below advertisement

பிபிஓ, வங்கிகள், காப்பீடு, மின் வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரம் மற்றும் வேகமாக விற்பனை ஆகக்கூடிய நுகர்வோர் பொருட்கள், மனித வளம், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளோர் மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கும் காலியிடங்கள் உள்ளன. மாதத்திற்கு ரூபாய் 10,000 முதல் ரூபாய் 30,000 வரை ஊதியம் வழங்கக்கூடிய வேலைகளாக இவை இருக்கும். 22 முதல் 35 வயது வரை உள்ள வேலை தேடும் இளைஞர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேற்கொண்டு தகவல்கள் எதுவும் தேவைப்பட்டால் 044-24615112 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து கடந்த 20-ஆம் முதல் இரவு நேர ஊரடங்கும் , ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் அறிவிப்புப்படி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணிமுதல் காலை 4 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படமாட்டாது. தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து மேற்கூறிய காலகட்டத்தில் இரவு 10 மணிமுதல் 4 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. 

கல்லுாரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக (online) வகுப்புகளை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லுாரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக (online) மட்டுமே நடத்தப்பட வேண்டும்.கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள். இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. கோடை கால முகாம்கள் (summer விதிக்கப்படுகிறது. camps) நடத்த தடை தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் (Hotels) இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola