நீட் தேர்வில் முறைகேடு இல்லை, நீட் தேர்வே முறைகேடுதான்.  பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில், முறைகேடு நடந்ததாகக் கூறி தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த முறைகேடு நடந்திருந்தாலும் முதல் முறையாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்து இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

Continues below advertisement

’’#NEET – Never Been Neat:

இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.

ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!

உயிரோடு விளையாடும் நீட் தேர்வு முறை 

ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.

மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.

புதிதாக அமைந்திருக்கும் அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.