நிறுத்திவைக்கப்பட்ட 18 தனியார் பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அப்போது, விதிகளை மீறியதாக 18 தனியார் பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திவைத்திருந்தது.
இந்நிலையில், மாணவர்களின் நலன்கருதி நிறுத்திவைக்கப்பட்ட 18 தனியார் பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.