நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையிலும், தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான செயல்களையே ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து செய்து வருகிறார். தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை.
எனவே சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.