தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு மாவட்டங்களுக்கு பணிகள் நிமித்தமாக செல்லும் போது அங்கே உள்ள அரசுப்பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் பாதுகாப்பான வகுப்பறைகள் போன்றவை உள்ளதா என்பது குறித்து பொதுவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதை தவிர ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு என்ன தேவையாக உள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கை என்ன என்பது குறித்து கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில்  திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி வளாகம் முழுவதையும் ஆய்வு செய்தார்.  பின்னர் மாணவிகளிடம் கலந்துரையாடினார்.   மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பள்ளியின் வளர்ச்சி சார்ந்த எண்ண தேவையாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மாணவிகளிடம் பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக அதனை உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சந்தேகங்களை கேட்டால்,  சக மாணவிகள் நம்மை கிண்டல் அடிப்பார்கள் என்று கவலைப்படாதீர்கள்.


 




 


மேலும், அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்காக மட்டும் தயாராகாமல் சின்ன சின்ன யூனிட் டெஸ்ட்களில் கூட நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்கிற எண்ணத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு படித்த பின்னர் அடுத்து மேற்படிப்பு என்ன மேற்கொள்ள உள்ளோம் என்பது குறித்து இப்பொழுதே திட்டமிடுங்கள். உங்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு நன்றாக படியுங்கள். இந்த சமூதாயத்தில் நல்ல நிலைமைக்கு நீங்கள் வர வேண்டும். எப்போதும் ஆசிரியர்கள், திமுக அரசு, மாணவ, மாணவிகளுக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.