தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது ஆகும்.

தனித்துவம் மிக்க நிறுவனம்

இந்த நிறுவனம் திரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குனர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.

Continues below advertisement

இந்தியாவிலேயே முறையாக முதன் திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016- 2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப் படிப்புகளை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் பயிற்றுவித்து வருகிறது.

6 பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை

2026- 2027ஆம் கல்வி ஆண்டில், ஆறு பாடப் பிரிவுகளில் பட்டப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கான இணையதளம் (www.filminstitute.tn.gov.in) வழியாக விண்ணப்பங்கள் 12.05.2026 முதல் 21.06.2026 மாலை 5.00 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கீழ்க்காணும் இரண்டு பாடப்பிரிவுகளுக்கு மட்டும், நிர்வாக காரணங்களுக்காக 27.06.2026 மாலை 05.00 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என்பது இதன் மூலமாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

  1. இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை)
  2. இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு)

Bachelor of Visual Arts (Digital Intermediate)

Bachelor of Visual Arts (Audiography)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/ மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: www.filminstitute.tn.gov.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அறியலாம்.