தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இந்த ஆண்டு   பேனா மற்றும் காகித முறையில் (OMR அடிப்படையிலான) நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.


நீட் தேர்வு: 


மருத்துவ படிப்புகளுக்கான  இந்த ஆண்டிற்கான NEET-UG மருத்துவ நுழைவுத் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில்( OMR) நடத்தப்படுமா அல்லது கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) நடத்தப்படுமா என்கிற எழுந்தது. இதற்கான பேச்சுவார்ததையை சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி நட்டாவுடன் நடத்தப்பட்டது. 


இதையும் படிங்க: ஒத்திவைக்கப்பட்ட UGC நெட் தேர்வு.. மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதியை அறிவித்த NTA


இது குறித்து அவர் பேசுகையில் நீட் நிர்வாக அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம், இடையே  நீட் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில் நடத்தப்பட வேண்டுமா அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஜே.பி.நட்டா தலைமையிலான சுகாதார அமைச்சகத்துடன் நாங்கள் ஏற்கனவே இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தேர்வை நடத்துவதற்கு எந்த  முறை சிறந்தது என்று கருதப்பட்டாலும், அதை செயல்படுத்த என்டிஏ தயாராக உள்ளது,"  என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். 


வழக்கமான முறையில் தேர்வு: 


இந்த நிலையில் நீட் தேர்வு வழக்கம் போல் பேனா மற்றும் பேப்பர் முறையில் தொடரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்து ஒரே நாளில், ஒரே ஷிப்ட்டில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது






மேலும் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019 கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும், இந்திய மருத்துவ முறையின் BAMS, BUMS மற்றும் BSMS உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் பொருந்தும் என்றும் NTA அறிவித்தது. தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் கீழ் BHMS படிப்பிற்கான சேர்க்கைக்கும் நீட்-ல் தேர்ச்சி வேண்டும் என்று NTA தெரிவித்துள்ளது.


மேலும், எம்என்எஸ் (மிலிட்டரி நர்சிங் சர்வீஸ்) விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி. 2025 ஆம் ஆண்டிற்கான ஆயுதப்படை மருத்துவ சேவை மருத்துவமனைகளில் நடத்தப்படும் நர்சிங் படிப்புகளும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். NEET (UG) மதிப்பெண் நான்கு ஆண்டு பி.எஸ்சி  தேர்வுக்கான பட்டியலுக்கும் இது பயன்ப்படுத்தப்படும்