எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர இன்று (செப்.22) முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு https://ugreg22.tnmedicalonline.co.in/mbbs22/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வு முடிவு கடந்த 7ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது.
மாணவர்கள் https://tnmedicalselection.net/ மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000
தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை தொடங்கும் தேதிகள் பின்னர் தொடங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது 2022 டிசம்பர் 31 அன்று 17 வயது முடிவடைந்திருக்க வேண்டும்.
மாணவர்கள் பதிவேற்றத் தேவையான ஆவணங்கள் என்னென்ன?
* நீட் தேர்வு அனுமதி அட்டை மற்றும் மதிப்பெண் அட்டை.
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் தாள் (இருபுறமும்).
* 12ஆம் வகுப்பு மதிப்பெண் தாள் (இருபுறமும்).
* 12ஆம் வகுப்பு முடித்த பிறகான டிசி சான்றிதழ்.
* 6 முதல் 12ஆம் வகுப்பு வரை முழுமையாக தமிழ்நாட்டில் படித்ததற்கான சான்றிதழ்.
* சாதிச் சான்றிதழ். (தேவைப்படுவோருக்கு மட்டும்).
இருப்பிடச் சான்றிதழ்.
* பிறப்புச் சான்றிதழ்.
தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்களின் பெற்றோரின் ஆவணங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக,
* சாதிச் சான்றிதழ் (வகுப்பு இட ஒதுக்கீட்டைக் கோருபவர்)
* பெற்றோரின் மதிப்பெண் சான்றிதழ் அல்லது கல்வியறிவு இல்லாத பெற்றோர் பட்டதாரி அல்லாத சான்றிதழை வழங்க வேண்டும்.
* ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் அட்டை - இவற்றில் ஏதேனும் ஒன்று
* ரேஷன் கார்டு / பாஸ்போர்ட்- இவற்றில் ஏதேனும் ஒன்று
* முதல் பட்டதாரி சான்றிதழ் (பொருந்தினால்).
* மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவில் விண்ணப்பிப்போர், ரூ.100/- கூடுதல் கட்டணத்துடன் கூடிய சிறப்பு வகைப் படிவத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* அரசுப் பள்ளி 7.5%இட ஒதுக்கீடு கோருவோர், முதன்மைக் கல்வி அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும்,
* கட்டண விலக்கு கோரும் விண்ணப்பதாரர்களுக்கான பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
* மாநிலக் கல்வி வாரியம் தவிர்த்த பிற வாரியங்களின் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
* நீதிமன்ற உத்தரவுகள் (ஏதேனும் இருந்தால்)
* கூடுதல் துணை ஆவணங்கள் (ஏதேனும் இருந்தால்)
உதவி எண்கள்
1. 044-29862045
2. 044-29862046
3. 044-28363822
4. 044-28364822
5. 044-28365822
6. 044-28366822
7. 044-28367822
8. 044-28361674
அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/21092022213736.pdf
தனியார் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/21092022213816.pdf