அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு சலுகைகள் அரசால் வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணையதளம் (Online) வாயிலாக பயிற்சியாளர்கள் சேர்க்கை www.skilltrainingrn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நடைபெறுகின்றது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற உம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு தொழிற்பிரிவுகள் (12), ஈராண்டு தொழிற்பிரிவுகள் (12) என மொத்த இருக்கைகள் 1020 உள்ளன.
கட்டணமின்றி பயிற்சிகள்
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இத்துறையின் இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் (PROSPECTUS) தரப்பட்டுள்ளன. இவ்விளக்கக் கையேட்டினை மாணவர்கள் பார்வையிட்டு கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாகப் படித்து இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு கீழ்க்காணும் சலுகைகள் அரசால் வழங்கப்படும்.
1. தவித்தொகை மாதம் - ரூ.750
2. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000.
3. இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி
6.பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள்
7. இரண்டு செட் சீருடைகள் மற்றும் தையற்கூலி
8. ஒரு செட் காலணிகள் (Shoe)
9. அடையாள அட்டை
பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துத் தரப்படும்
விண்ணப்பிக்க கடைசி தேதி
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 13.06.2025 ஆகும். பயிற்சியில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது மூன்று மாவடி, மதுரை என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திற்கு நேரிலும் அல்லது இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்திற்கோ (Help Desk) அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் Online இல் இலவசமாக விண்ணப்பித்துத் தரப்படும். பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கூடுதல் விவரங்களுக்கு மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களுக்கோ (97513 59944, 90435 70578 மற்றும் 0452-2903020) தொடர்பு கொண்டு தகவலினை பெற்றக் கொள்ளலாம் என்று மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் முதல்வர் ரமேஸ்குமார் தெரிவித்துள்ளார்.