சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்களின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 29) இரவு வெளியாகின. எனினும் சர்வரில் ஏற்பட்ட கோளாறால், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முடியாமல், அவதிக்கு ஆளாகினர்.

Continues below advertisement

பாரம்பரியம் மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு விதமான இளநிலை, முதுநிலை படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான 2023-24ம் கல்வியாண்டு நவம்பர்/ டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று முடிந்தன.

சர்வரில் கோளாறு

அவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 30) இரவு வெளியாகின. எனினும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தேர்வு முடிவுகளை அறிய முயன்றதால் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தின் சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முடியாமல், மாணவர்கள் அவதிக்கு ஆளாகினர்.

Continues below advertisement

இரவு வெகுநேரம் வரை நீடித்த பிரச்சினையால் மாணவர்கள் பதற்றமடையத் தொடங்கினர். எனினும் பிறகு தேர்வு முடிவுகள் ஒருவழியாக வெளியாகின.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

குறிப்பாக பி.காம்., பி.காம். சிஏ, பி.காம். (ஏ & எஃப்), பி.காம். (ஹானர்ஸ்) உள்ளிட்ட முதுகலைப் படிப்புகளுக்கும் பி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.காம். ஆகிய படிப்புகளுக்கும் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

பி.காம்., பி.காம். சிஏ, பி.காம். (ஏ & எஃப்), பி.காம். (ஹானர்ஸ்) முதுநிலை மாணவர்கள், https://egovernance.unom.ac.in/results என்ற இணையதளத்திலும், பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., சமஸ்கிருதம், உருது, அரபு மொழித் தேர்வு முடிவுகளை https://exam.unom.ac.in என்ற இணையதளத்திலும் அறியலாம்.

மறு மதிப்பீடு எப்போது? எப்படி?

தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மதிப்பெண்களில் போதாமை ஏற்பட்டு, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், வருகிற ஏப்ரல் 1-ம்தேதி முதல் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

ரூ.1000 கட்டணம்

மறு மதிப்பீட்டிற்கு ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கான தொகையை, 'பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

இளநிலை மாணவர்களும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.300 கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை, 'பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.unom.ac.in/results.php