சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் காலியாக உள்ள 202 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம், பணியிடம் சென்னை, மதுரை. மொத்த காலியிடங்கள் 202 ஆகும். பணி அடிஷனல் அட்வகேட் ஜெனரல் – 9 பணியிடங்கள். மாநில அரசு பிளீடர் - 1 பணியிடம். அரசு பிளீடர் – 1. சிறப்பு அரசு பிளீடர் 33. அடிஷனல் அரசு பிளீடர் 55. அரசு வழக்கறிஞர்(சிவில் பகுதி) – 71 பணியிடங்கள். அரசு வழக்கறிஞர்( குற்றம்) – 29 பணியிடங்கள். அரசு வழக்கறிஞர்கள்( வரிகள்) – 3 பணியிடங்கள்.
தகுதி :
சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு :
60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை – 60009.
கடைசி நாள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 29.07.2021. மேலும் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளவும்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. தி.மு.க. மே 7-ந் தேதி பதவியேற்றது முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு வழக்கறிஞர்களாக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், பல பகுதிகளில் பதவியிடங்கள் காலியானது. அந்த பதவியிடங்கள் நிரப்பப்படும் வரை அந்த பொறுப்புகளை கவனித்துக்கொள்ளுமாறும் ராஜினாமா செய்ய தயாராக இருந்தவர்களிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, சிலர் அந்த பொறுப்புகளை கவனித்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்கள், அரசு பிளீடர்கள் உள்ளிட்ட 202 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.