Pariksha Pe Charcha 2025: ’தேர்வு மட்டுமே முக்கியமில்லை; ஓவர் திங்க் பண்ணாதீங்க’- மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

Pariksha Pe Charcha 2025: தலைமைத்துவம் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, "ஒரு தலைவர், தான் போதிக்கும் விஷயங்களைச் செயல்படுத்தி, மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும்போதுதான் அவர் தலைவராகிறார்" என்று கூறினார்.

Continues below advertisement

தேர்வுகள் மட்டும் எல்லாமுமே கிடையாது. எதையும் அதீதமாகச் சிந்திக்காதீர்கள் என்று பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு, பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

Continues below advertisement

ஆண்டுதோறும் மாணவர்களைச் சந்திக்கும் பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியின் 8ஆவது பதிப்பு இன்று டெல்லி, சுந்தர் நர்சரியில் நடைபெற்றது. இந்த முன்னெடுப்பில், 3.30 கோடி மாணவர்களும் 20 லட்சம் ஆசிரியர்களும் கலந்துகொள்ள விண்ணப்பித்து இருந்தனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அளித்த அறிவுரைகளின் டாப் 5 ஹைலைட்ஸ் இதோ!

தேர்வுகள் எல்லாமுமே இல்லை

தேர்வுகள் மட்டுமே எல்லாம் கிடையாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

கவனச் சிதறல்களைத் தவிருங்கள்

மாணவர்கள் தங்கள் குறிக்கோள்களில் கவனம் செலுத்தி, கவனச் சிதறல்களைத் தவிர்க்க வேண்டும் என்றார் மோடி. இதற்கு கிரிக்கெட்டில் இருந்தும் பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். ’’ஒரு பேட்ஸ்மேன் பார்வையாளர்களையும் கவனச் சிதறல்களையும் புறக்கணித்து பந்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்."

சவால்களை எதிர்கொள்ளுங்கள்

பிரதமர் மோடி, மாணவர்கள் தங்களின் எல்லைகளை விரிவாக்கி, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மனத்தைத் தயார் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உண்மையான தலைவராக இருங்கள்

தலைமைத்துவம் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, "ஒரு தலைவர், தான் போதிக்கும் விஷயங்களைச் செயல்படுத்தி, மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும்போதுதான் அவர் தலைவராகிறார்" என்று கூறினார்.

அதீதமாய்ச் சிந்திக்காதீர்கள்

நிகழ்காலத்தில் இருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி, தேவையில்லாமல் அதீதமாய்ச் சிந்திக்காதீர்கள் என்று அறிவுறுத்தினார். இந்த கணத்தை வாழுங்கள். அதை முழுமையாக வாழ விட்டால், எல்லாமே வீண்தான் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களின் தேர்வு பயம் போக்குவது, ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கலந்துரையாடும் வகையில், ஆண்டுதோறும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக நடத்தப்படும் "பரிக்‌ஷா பே சார்ச்சா" என்ற நிகழ்ச்சி (Pariksha Pe Charcha - PPC 2025)  இன்று நடைபெற்றது. 

அது என்ன பரிக்ஷா பே சார்ச்சா?

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 8ஆவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடந்தது.

Continues below advertisement
Sponsored Links by Taboola