பி.ஏ. (தொழிலாளர்‌ மேலாண்மை) பட்டப் படிப்பு, எம்‌.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும்‌ பிஜி.டி.எல்‌.ஏ (தொழிலாளர்‌ நிர்வாகத்தில்‌ முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), தொழிலாளர்‌ சட்டங்களும்‌ நிர்வாகவியல்‌ சட்டமும்‌ (வார இறுதி) பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தொழிலாளர் கல்வி நிலையம் தெரிவித்து உள்ளதாவது:


''தமிழ்நாடு தொழிலாளர்‌ கல்வி நிலையத்தில்‌ பி.ஏ.(தொழிலாளர்‌ மேலாண்மை) பட்ட படிப்பு, எம்‌.ஏ. (தொழிலாளர்‌ மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும்‌ பிஜி.டி.எல்‌.எ (தொழிலாளர்‌ நிர்வாகத்தில்‌ முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), தொழிலாளர்‌ சட்டங்களும்‌ நிர்வாகவியல்‌ சட்டமும்‌ (வார இறுதி) பட்டய படிப்புகளும்‌ நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர்‌ மேலாண்மை), எம்‌.ஏ. (தொழிலாளர்‌ மேலாண்மை) படிப்புகள்‌ சென்னை பல்கலைக்கழகத்தால்‌ அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிஜி.டி.எல்‌.ஏ. மற்றும்‌ டி.எல்‌.எல்‌ (ஏ.எல்‌.) படிப்புகள்‌ தமிழக அரசின்‌ அங்கீகாரத்துடன்‌ நடைபெற்று வருகின்றது.


பி.ஏ.  (தொழிலாளர்‌ மேலாண்மை, எம்‌.ஏ (தொழிலாளர்‌ மேலாண்மை), பிஜி.டி.எல்‌.ஏ. மற்றும்‌ டி.எல்‌.எல்‌ (ஏ.எல்‌.) ஆகிய பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகள்‌ தொழிலாளர்‌ நல அலுவலர்‌ பதவிக்கு பிரத்யேக கல்வித்‌ தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள்‌ தொழிலாளர்‌ நல அலுவலர்‌ விதிகளில்‌ வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில்‌ பயின்ற மாணவர்கள்‌ பல்வேறு தொழிற்சாலைகளில்‌ மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்‌, தமிழ்நாடு அரசு தொழிலாளர்‌ துறையில்‌ தொழிலாளர்‌ உதவி ஆணையர்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ உதவி ஆய்வர்‌ பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர்‌ மேலாண்மை), எம்‌.ஏ. (தொழிலாளர்‌ மேலாண்மை) மற்றும்‌ பிஜி.டி.எல்‌.ஏ. ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்பு / பட்டய படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம்‌ செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


விருப்பமுள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்கள்‌ பட்டப்படிப்பிற்கும்‌, எதேனும்‌ ஒரு பட்டம்‌ பெற்ற மாணவர்கள்‌ முதுநிலை பட்ட மற்றும்‌ பட்டய படிப்புகளுக்கும்‌ விண்ணப்பிக்கலாம்‌. விண்ணப்பிப்பவர்கள்‌ மதிப்பெண்‌ அடிப்படையில்‌ அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌.


விண்ணப்ப கட்டணம்‌ - ரூ. 200/-
For SC/ST —  ரூ.100/- (சாதிச் சான்றிதழ்‌ நகல்‌ தாக்கல்‌ செய்ய வேண்டும்‌)


விண்ணப்பங்களை தபாலில்‌ பெற, விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200/- (SC/ST - ரூ.100/-) மற்றும்‌ தபால்‌ கட்டணம்‌ ரூ.50/- க்கான வங்கி வரைவோலையினை "The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai" என்ற பெயரில்‌ எடுத்து பதிவுத்‌ தபால்‌ / விரைவு அஞ்சல்‌ / கொரியர்‌ மூலம்‌ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. மதிப்பெண்‌ மற்றும்‌ அரசு விதிகளின்‌ அடிப்படையில்‌ மாணவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌.


பி.ஏ. (தொழிலாளர்‌ மேலாண்மை) படிப்புக்கான பூர்த்தி ய்த விண்ணப்பங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 16.06.2023


எம்‌.ஏ. (தொழிலாளர்‌ மேலாண்மை), பி.ஜி.டி.எல்‌.ஏ. மற்றும்‌ .எல்‌.எல்‌ (ஏ.எல்‌.) படிப்புக்களுக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 26.06.2023


மேலும்‌ விவரங்களுக்கு : 
முனைவர்‌ இரா. ரமேஷ்குமார்‌, இணைp பேராசிரியர்‌, ஒருங்கிணைப்பாளர்‌ (சேர்க்கை)
Mobile No. 9884159410
தமிழ்நாடு தொழிலாளர்‌ கல்வி நிலையம்‌
மின்வாரிய சாலை, மங்களபுரம்‌(அரசு ஐ.டி.ஐ பின்புறம்‌)
அம்பத்தூர்‌, சென்னை - 600 098
தொலைபேசி எண்‌. 044 - 2956788685 / 29567886
Email: tilschennai@tn.gov.in ''


இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.