தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டத்தில் ரூ.3.82 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களை கொண்டாடுவோம் விழாவில் காணொளி காட்சி வாயிலாக, கரூர் மாவட்டம் கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தையும்,
மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தையும் என மொத்தம் ரூ.3.82 கோடி மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்ததையொட்டி மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) செயற்பெறியாளர் சுஜாதா, உதவி செயற்பொறியாளர் ரவீந்தரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம், வட்டாட்சியர் மோன்ராஜ், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.