மக்கள் குறைதீர்க்கும் மனுநீதி முகாமில் " பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு"


இராச்சாண்டார் திருமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனுநீதி முகாமில் "பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு" என்ற மாவட்ட ஆட்சியரின் முத்தான திட்டத்தின் மூலம், 2022-2023-ம் கல்வியாண்டில் வாளியம்பட்டியிலிருந்து 22 (இருபத்தி இரண்டு) பள்ளிசெல்லா குழந்தைகளை அழைத்து வந்ததில் ஐந்து மாணவிகள் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதை பரிசுகள் வழங்கி சிறப்பித்த நமது மாவட்ட ஆட்சியரின் நிகழ்வுகள் குறித்த அறிக்கை.


 




 


2022-2023ம் கல்வியாண்டில் "வாளியம்பட்டி" என்ற R.T மலை ஊராட்சியை சேர்ந்த கிராமத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு நமது கரூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு கவனத்தினால் “பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு” என்ற நிகழ்வின் மூலம் வாளியம்பட்டியிலிருந்து ஒரு சிறப்பு பேருந்தும் அக்கிராமத்திற்கு விடப்பட்டு, அங்கிருந்து நமது மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் அடங்கிய குழுக்கள் மூலம் 22 மாணவிகள் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இராச்சாண்டார் திருமலைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் கீழ்க்கண்ட 5 மாணவிகள் 10-ம் வகுப்பில் படித்து ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர். அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 458 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவிகளையும் கேடயம் வழங்கி கௌரவித்தார். இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி மாணவிகளுக்கு கல்வி புகட்டிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வினால் ஆசிரியர்கள் வாளியம்பட்டி மற்றும் ஆர்டிமலை மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். 500க்கு 458 மதிப்பெண் எடுத்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் N.பூரணாஸ்ரீ. A பவ்யா,  K. பிரியதர்ஷினி 


 


 


 




 


வாளியம்பட்டி என்ற கிராமத்தில் இருந்து "பள்ளிக்கூட மணியடிச்சாச்சு” என்ற நிகழ்வின் மூலம் 2022-2023-ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டு 10ம் வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகள் பெயர்ப்பட்டியல்


1)சகாவியா-364 தபெ சக்திவேல் மேலவாளியம்பட்டி 2)பி. நித்யா -216 த/பெ பிச்சை கீழவாளியம்பட்டி, 3)பரீனா 319 த/பெ பழனிச்சாமி மேலவாளியம்பட்டி, 4)சி. மீனாலட்சுமி - 347 த/பெ சின்ராசு கீழவாளியம்பட்டி, 5) சி.லோகேஷ்வரி-360 தபெ சின்னசாமி கீழவாளியம்பட்டி



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.