2026ஆம் ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அட்டவணை தேசிய தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு இலக்கு வைக்கும் மாணவர்களுக்கு இது ஒரு முக்கிய அறிவிப்பாகும். இந்த தேர்வுக்கான பதிவு செயல்முறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் NTA இன் அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.ac.in ஐ தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய தேதிகள்
பொதுவாக, JEE Main தேர்வுகள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். முதல் அமர்வு ஜனவரி மாதத்திலும், இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும். 2026 ஆம் ஆண்டிற்கான முதல் அமர்வு தேர்வு ஜனவரி 21 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் அமர்வுக்கான தேர்வு ஏப்ரல் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஜனவரி மாத அமர்வுக்கான தேர்வு இந்த மாதத்திலேயே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஏப்ரல் மாத அமர்வுக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. முதல் அமர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த செயல்முறை தொடங்க உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
- ஸ்டெப் 1:NTA JEE Main-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
- ஸ்டெப் 2:"JEE Main 2026 பதிவு" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- ஸ்டெப் 3:புதிய பயனர்கள் முதலில் பதிவு செய்து, விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.
- ஸ்டெப் 4:உருவாக்கப்பட்ட சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழைந்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
- ஸ்டெப் 5:தேவையான ஆவணங்களை (புகைப்படம், கையொப்பம்) பதிவேற்றவும்.
- ஸ்டெப் 6:தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- ஸ்டெப் 7:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக ஒரு நகலை அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.
தகுதி என்ன?
ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தற்போது 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு 2026 -க்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு முன் ஆதார் அட்டை/ UDID அட்டை/ வகை சான்றிதழ் (EWS/ SC/ ST/ OBC- NCL ) புதுப்பிப்பது குறித்த ஆலோசனை மற்றும் வழிமுறைகளைக் காண https://cdnbbsr.s3waas.gov.in/s3f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf/uploads/2025/09/20251001501628450.pdf என்ற இணைப்பை காணவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.nta.ac.in/Download/Notice/Notice_20251019125337.pdf என்ற அறிவிக்கையைக் காணவும்.
மாணவர்கள், என்டிஏவின் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.