நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்கள் எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 1) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. தேர்வெழுதிய மாணவர்கள் jeeadv.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாகத் தங்கள் மதிப்பெண் சான்றிதழைத் தெரிந்துகொள்ளலாம்.

Continues below advertisement

அகில இந்திய அளவில் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடிகளில் சேர முடியும். இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மே 17ஆம் தேதி நடந்தன. இந்த நிலையில், விடைக்குறிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன. பின்பு மாணவர்களிடம் இருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, தற்போது முழுமையான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

எவ்வளவு பேர் தேர்ச்சி?

ஒட்டுமொத்தமாக இத்தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 86 ஆயிரத்து 584 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 200 மாணவர்கள் மட்டுமே இரண்டு தாள்களையும் (தாள் 1 & 2) முழுமையாக எழுதினர்.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, மொத்தம் 48,248 மாணவர்கள் ஐஐடியில் சேருவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இதில் தகுதி பெற்ற 48,248 பேரில், 40,284 பேர் மாணவர்கள்; மீதமுள்ள 7,964 பேர் மாணவிகள் ஆவர்.

அகில இந்திய அளவில் அடுத்தடுத்த இடங்களில் ஐஐடி டெல்லி மண்டல மாணவர்களே இடம்பெற்றுள்ளனர்.  

மதிப்பெண்சான்றிதழைப்பெறுவது எப்படி?

  1. முதலில்மாணவர்கள்ac.in என்றஅதிகாரப்பூர்வஇணையதளத்திற்குச்செல்லவேண்டும்.
  2. முகப்புப் பக்கத்தில் "JEE Advanced 2026 Scorecard Download" என்ற இணைப்பைக் கண்டறிந்து கிளிக் செய்ய வேண்டும்.
  3. திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்களின் ரோல் நம்பர், பிறந்த தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றைச் சரியாக உள்ளிட வேண்டும்.
  4. விவரங்களைச் சமர்ப்பித்தவுடன், பாடவாரியான மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை திரையில் தோன்றும்.
  5. ஜோசா (JoSAA) கலந்தாய்வுக்கு இந்தச் சான்றிதழ் கட்டாயம் என்பதால், இதனை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு?

இந்த ஆண்டு பொதுப்பிரிவினருக்கான (General Category) குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் ஒவ்வொரு பாடத்திற்கும் 10% ஆகவும், ஒட்டுமொத்தமாக 35% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஒட்டுமொத்தமாக 31.5% ஆகவும், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 17.5% ஆகவும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி-களில் சுமார் 18 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான ஜோசா சேர்க்கை மற்றும் கலந்தாய்வு தேதிகள் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.