காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் (LKG )25% இட ஒதுக்கீட்டில் RTE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.
RTE மாணவர் சேர்க்கை
மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் (LKG ) 25% இட ஒதுக்கீட்டில் RTE மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. மேற்காண் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையம் மூலம் 17.10.2025 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
25 சதவீத இட ஒதுக்கீடு
RTE மாணவர் சேர்க்கையில், அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG) 25% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேர்க்கை நடைமுறைகள் RTE ACT 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள் 2011 அடிப்படையில் நடைபெறும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை நடைபெறுகிறது. தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்கான 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் (RTE) சேர்க்கை அட்டவணை
06.10.2025 - மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
07.10.2025 - 30.09.2025 நிலவரப்படி நுழைவு வகுப்பில் நிரப்பப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கை பதிவேற்றம்.
நாள் 3 - 08.10.2025 மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25% ஒதுக்கீடு, பள்ளி (EMIS LOGIN) உள் நுழைவில் காட்டப்படுதல்.
நாள் 4 - 09.10.2025 - தகுதியுடைய மாணவர்களின் விவரங்கள் ( ஆதார், பிறப்பு / இருப்பிடம் / வருமானம் மற்றும் சாதிச்சான்றிதழ்) பதிவேற்றம்.
நாட்கள் 5 & 6 10.10.2025- 13.10.2025 : தகுதியான / தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் அறிவிப்பு விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு
நாள் 7- 14.10.2025 - தகுதி பெற்ற மாணவர் இறுதி பட்டியல் வெளியீடு
நாள் 8 - 15.102025 - தகுதியுடைய மாணவர்களை Emis Portalல் உள்ளீடு செய்தல்
நாள் 9 - 16.10.2025 - விண்ணப்பங்கள் 25% ஐ மீறினால் சிறப்பு முன்னுரிமைப் பிரிவுகளுக்கு பின், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் அறிவித்தல்
நாள் 10 - 17.10.2025 - தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை Emis Portal இல் உள்ளீடு செய்தல்.