மேலும் அறிய

மருத்துவப்படிப்பு சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு- அன்புமணி

தமிழக அரசு மருத்துவர்களுக்கான இடங்களுக்கு மட்டும் ஒரே ஒரு கட்ட கலந்தாய்வை மட்டும் நடத்திவிட்டு, மீதமுள்ள இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத அநீதியாகும்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு உயர்சிறப்பு மருத்துவர்கள் கிடைக்க இந்த இடங்கள் தான் மட்டுமே ஒரே வாய்ப்பாக இருக்கும் நிலையில் அதையும் பறிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது அநீதியாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 670 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு கல்லூரிகளில் மட்டும் 415 இடங்கள் உள்ள நிலையில், அதில் 50%, அதாவது 215 இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ வல்லுனர்கள் கிடைக்க

இந்த இடங்களில் சேரும் அரசு மருத்துவர்களிடம், அவர்கள் ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று பிணைப் பத்திரம் எழுதி வாங்கப்படும். பொதுவாக உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மருத்துவர்கள் அனைவரும் அதிக ஊதியம் கிடைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ வல்லுனர்கள் கிடைப்பதற்கு இந்த ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே காரணம் என்றால் அதில் மிகையில்லை.

உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 215 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக நீட் தேர்வின் மூலம் உரிய தகுதி மதிப்பெண்களைப் பெற்று விண்ணப்பித்த 170 பேரில், அதிக மதிப்பெண் பெற்ற 100 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களில் 71 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களில் 68 பேர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தங்களுக்கான ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இடங்களை நிரப்பும் நோக்குடன் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் தான், முதல்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்படாத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்  தொடரப்பட்டது.

இதைக் காரணம் காட்டி, மத்திய சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் அலுவலகம் வாயிலாக நடத்தப் பட்டு வந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தப்ப்பட்ட நிலையில், வேறு வழியில்லாமல் அதை பின்பற்றி தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட கலந்தாய்வும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் 29ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாத 151 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதற்கு எதிராக தமிழக அரசு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை.

தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் வழக்கம் 2000- 01 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. 2017ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப் பட்ட பின்னர் முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசே நடத்தியதால், இந்த இடஒதுக்கீடு தடைபட்டது. எனினும் 2022ஆம் ஆண்டில் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசுக்கு அதன் மருத்துவர்களுக்காக இடங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளித்ததால் இந்த இட ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வந்தது. ஆனால், இந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக தமிழக அரசு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கும்படி உச்சநீதிமன்றமே  தீர்ப்பளித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மிகப்பெரிய சமூக அநீதி சரி செய்யப்பட வேண்டும்.

ஏற்றுக்கொள்ளவே முடியாத அநீதி

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்புவதற்கு மூன்று முதன்மைச் சுற்றுகளும், நான்காவதாக ஒரு கூடுதல் சுற்றும் கலந்தாய்வு நடத்தப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் தமிழக அரசு மருத்துவர்களுக்கான இடங்களுக்கு மட்டும் ஒரே ஒரு கட்ட கலந்தாய்வை மட்டும் நடத்திவிட்டு, இரண்டாம் கட்ட கலந்தாய்வைக் கூட நடத்தாமல் மீதமுள்ள இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத அநீதியாகும்.

அண்மைக்காலங்களாக முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் பெரும்பாலானவை முதல் கட்ட கலந்தாய்வில் நிரம்புவதில்லை. அதன்பின் தகுதி மதிப்பெண்களை  மத்திய அரசு குறைத்த பிறகு தான் பெரும்பான்மையான இடங்கள் நிரம்புகின்றன. நடப்பாண்டிலும் மத்திய அரசின் சார்பில் கலந்தாய்வு நடத்தப்படும் இடங்களுக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படவுள்ளன. அவ்வாறு குறைக்கப்பட்டால், அதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டால், அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, இதுவரை நிரப்பப்படாமல் இருக்கும் 151 இடங்களும் ஒரு மணி நேரத்தில் நிரம்பி விடும். அதற்காக வாய்ப்புகளை வழங்காமல் உச்சநீதிமன்றம் தடை போடுவது நியாயமல்ல.

தமிழ்நாட்டில் உள்ள உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் தமிழக மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்டவை. அவை தமிழக மக்களின் சொத்துகள். இந்த இடங்கள் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படாமல், அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு வழங்கப்பட்டால், தமிழக அரசு மருத்துவமனைகளில்  உயிர்காக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள தகுதியான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த நிலையை மாற்ற தமிழக அரசு 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கக்கூடாது. மேலும் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்தத் தீர்ப்பை எதிர்த்து கூடுதக் நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்’’ என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மருத்துவப்படிப்பு சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு- அன்புமணி
மருத்துவப்படிப்பு சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு- அன்புமணி
NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Next Plan : சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Mamata Banerjee: ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
TN DGP: புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
CM Vijay: வெற்றி கொடுத்த திருச்சி, விட்டுக்கொடுத்த விஜய்..! மக்கள் சந்திப்பில் முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு?
வெற்றி கொடுத்த திருச்சி, விட்டுக்கொடுத்த விஜய்..! மக்கள் சந்திப்பில் முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Duraimurugan DMK : எப்பா சாமி.. கட்சியே வேண்டாம்.? ஒதுங்கும் துரைமுருகன்- திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்.?
எப்பா சாமி.. கட்சியே வேண்டாம்.? ஒதுங்கும் துரைமுருகன்- திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்.?
Tamilnadu Roundup: திருச்சியில் நன்றி சொல்லும் விஜய்! தமிழ்நாட்டில் வெயிலுக்கும் மழைக்கும் வாய்ப்பு - 10 மணி பரபரப்பு
Tamilnadu Roundup: திருச்சியில் நன்றி சொல்லும் விஜய்! தமிழ்நாட்டில் வெயிலுக்கும் மழைக்கும் வாய்ப்பு - 10 மணி பரபரப்பு
Embed widget