சென்னை ஐஐடியின் தான்சானியா கிளை: பி.எஸ்., எம்.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்; எப்படி?

ஐஐடி சென்னை கிளையான தான்சானியா -‌ சான்சிபார்‌ வளாகத்தில்‌ பிஎஸ்‌ படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 கடைசித் தேதி ஆகும்.

Continues below advertisement

ஐஐடியால்‌ உருவாக்கப்பட்ட முதலாவது வெளிநாட்டு வளாகமான ஐஐடி சென்னை கிளையான தான்சானியா -‌ சான்சிபார்‌ வளாகத்தில்‌ பிஎஸ்‌ படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 கடைசித் தேதி ஆகும். எம்டெக்‌ படிப்புக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஐஐடி சென்னையில் 2024- 25ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாவது மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிஎஸ்‌ தரவு அறிவியல்‌ மற்றும்‌ செயற்கை நுண்ணறிவு, எம்டெக்‌ தரவு அறிவியல்‌ மற்றும்‌ செயற்கை நுண்ணறிவு (B.S. in Data Science and AI & M.Tech in Data Science and AI) ஆகிய 2 படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கற்பித்தல்‌- கற்றல்‌ அனுபவங்களை அதிகளவில்‌ வழங்கவும்‌, சந்தையின்‌ தேவைக்கு ஏற்ப அளிக்கவும்‌ தொழில்துறையினரின்‌ ஒத்துழைப்பு மற்றும்‌ பரிமாற்றத்‌ திட்டங்கள்‌ குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. 2023-ம்‌ ஆண்டில்‌ ஐஐடி-க்களிலேயே முதன்முறையாக ஐஐடி சென்னை வெளிநாட்டில்‌ முழு அளவிலான கல்வி வளாகத்தை நிறுவியது.

பிஎஸ்‌ படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்‌ - 15 ஏப்ரல்‌ 2024.

ஸ்கிரீனிங்‌ தேர்வு 9 ஜூன்‌ 2024 அன்று (இந்திய நேரப்படி பிற்பகல்‌ 2 மணி முதல்‌ மாலை 5 மணி வரை, கிழக்கு ஆப்பிரிக்க நேரப்படி முற்பகல்‌ 11.30 முதல்‌ பிற்பகல்‌ 2.30 மணி வரை. எம்டெக்‌ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்‌ 15 மார்ச்‌ 2024.

கூடுதல் விவரங்களை அறிய

தேர்வு செயல்முறையின்‌ பல்வேறு நிலைகள்‌, மதிப்பீட்டின்‌ விவரங்கள்‌, ஸ்கிரீனிங்‌ சோதனை முறை, கட்டண அமைப்பு, முக்கிய நாட்கள்‌, விரிவான பாடத்திட்டம்‌, தகுதி அளவீடுகள்‌ உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பின்வரும்‌ இணைப்பில்‌ இருந்து பெற்றுக்‌ கொள்ளலாம்‌: https://www.iitmz.ac.in/IITMZST_Information_Brochure_2024_v1.1.pdf

இந்த இரு பாடப்பிரிவுகள் குறித்து விளக்கம்‌ அளித்த ஐஐடி மெட்ராஸ்‌ சான்சிபாரின்‌ பொறியியல்‌- அறிவியல்‌ பள்ளிப்‌ பொறுப்பு இயக்குநர்‌ மற்றும்‌ டீன்‌ ப்ரீத்தி அகலாயம் கூறும்போது, “ஜஜடிஎம்‌ சான்சிபாரில்‌ இருந்து கல்வித்துறையில்‌ தாக்கத்தை ஏற்படுத்து முடியும்‌ என நம்புகிறோம்‌. கல்வி முறையில்‌ மாற்றத்தைக்‌ கொண்டுவரவும்‌, திறன்‌ அடிப்படையிலான கல்வியில் உலகின்‌ பல்வேறு பகுதிகளைச்‌ சேர்ந்தவர்களை இணைக்க‌ முடியம்‌ என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்‌.

உலகின்‌ பல்வேறு நாடுகளைச்‌ சேர்ந்த மாணவ- மாணவிகளின்‌ விருப்பங்களைப்‌ பூர்த்தி செய்யும்‌ வகையில்‌ புதிய தேர்வு மையங்களைச்‌ சேர்த்து விரிவுபடுத்த இக்கல்வி நிறுவனம்‌ இசைவு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கக்‌ கண்டத்தின்‌ பல்வேறு பிராந்தியங்கள்‌, மத்திய கிழக்கு, தெற்காசியா ஆகிய பகுதிகளில்‌ உள்ள 19 சர்வதேச மையங்களில்‌ ஆன்லைன்‌ ஸ்கிரீனிங்‌ சோதனைகள்‌ நடைபெறும்‌. உள்நாட்டு மையங்களின்‌
எண்ணிக்கையும்‌ 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள்‌ அணுகும்‌ வகையில்‌ தேர்வு மையங்களை ஏற்படுத்தவும்‌ அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.iitmz.ac.in/

 

Continues below advertisement
Sponsored Links by Taboola