ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக வெளியான தகவலுக்கு, சிஐஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. அதேபோல ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 22) மதியம் 3 மணிக்கு வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது. எனினும் இந்தத் தகவலை சிஐஎஸ்இ மறுத்துள்ளது.

தேர்வு முடிவுகள் எப்போது?

இதுகுறித்து விசாரித்தபோது ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிஐஎஸ்இ வட்டாரம் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெற்றன. ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய முகவரி

  • cisce.org
  • results.cisce.org

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • மாணவர்கள் https://cisce.org/ அல்லது results.cisce.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.
  • முகப்புப் பக்கத்தில் "Examination" பகுதியில் "ICSE" அல்லது "ISC" பிரிவில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்.
  • அதில் தேவையானவற்றை க்ளிக் செய்யவும்.
  • உங்களின் UID மற்றும் இண்டெக்ஸ் எண்ணை க்ளிக் செய்யவும், அதில் "Show Result" என்பதை தேர்வு செய்யவும்.
  • தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

2025 தேர்வு முடிவுகள்

கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை 99.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.