சி.ஏ எனப்படும் பட்டய கணக்காளர் இடைநிலை (ICAI CA Intermediate) மற்றும் இறுதித் தேர்வு முடிவுகளை ஐ.சி.ஏ.ஐ. (The Institute of Chartered Accountants of India (ICAI)) வெளியிட்டுள்ளது.
2024-ம் ஆண்டிற்கான சி.ஏ. இடைநிலை தேர்வுகள் குரூப், 1&2, இறிதித் தேர்வு குரூப் 1 கடந்த மே மாதம் நடைபெற்றது.
இறுதித் தேர்வில் 20,446 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஐ.சி.ஏ.ஐ. தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஷிவம் மிஸ்ரா இறுதித் தேர்வில் 83.33% மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். இவர் 500 மதிப்பெண் எடுத்துள்ளார்.
இந்தத் தேர்வில் டெல்லியைச் சேர்ந்த வர்ஷா அரோரா என்பவர் 480 அல்லது 80% மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை இருவர் பகிர்ந்துகொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த கிரன் ராஜேந்திர சிங் மனரால், கில்மேன் சாலிம் அன்சாசி ஆகிய இருவரும் 79.50% எடுத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். சி.ஏ. இறுதித் தேர்வு குரூப் 1 பிரிவில் 74 ஆயிரத்து 887 பேர் எழுதினர். இதில் 20,479 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 27.35% தேர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. குரூப் 2 பிரிவில் 58,891 பேர் தேர்வு எழுதியதில் 21,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.ஏ. இடைநிலைத் தேர்வுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.
சி.ஏ. இடைநிலைத் தேர்வில் குஷ்காரா ராய் எபவர் 89.67% மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். யுக் சச்சின் கரியா மற்றும் யாக்யா லலித் சந்தக் ஆகியோர் 87.67 % மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். மஹித் சிங் பாட்டியா, ஹிரேஷ் கஷிரம்கா ஆகியோர் 80.50% எடுத்து மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.1,17,764 பேர் தேர்வு எழுதியதில் 31.978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2 பிரிவில் 71, 145 பேர் தேர்வு எழுதியதில் 13,008 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.ஏ. இறுதித் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
- தேர்வு முடிவுகளை காண https://www.icai.org/ -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில், Final : May 2024 என்ற இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்து, வரிசை எண், பதிவு எண், கேப்ட்ச்சா ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
- எல்லா தகவல்களையும் கொடுத்தால் மதிப்பெண் பட்டியலைத் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இடைநிலைத் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
- தேர்வர்கள் icai.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில், Intermediate Examination : May 2024 என்ற இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
- தேர்வு முடிவுகளை காண தேவையான வரிசை எண், பதிவு எண், கேப்ட்ச்சா ஆகிய தகவல்களை பதிவிட வேண்டும்.
- மதிப்பெண் பட்டியலைத் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.