சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2025- 26ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான இறுதி கட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தத் தேர்வுகள், வரும் பிப்ரவரி 17முதல் தொடங்க உள்ளன.

Continues below advertisement

தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சிபிஎஸ்இ இணையதளத்தில் இதற்கான பிரத்யேக தளம் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி மாணவர்களுக்கான அட்மிட் கார்டு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதேசமயம், தனித்தேர்வர்களுக்கு (Private Candidates) ஏற்கனவே கடந்த ஜனவரி 19, 2026 அன்றே ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுவெளியாகும்?

வழக்கமாகத் தேர்வு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும். கடந்த 2025-ம் ஆண்டு, பிப்ரவரி 3ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியானது. அந்த அடிப்படையில் பார்த்தால், இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

டவுன்லோட்செய்வதுஎப்படி?

ஹால் டிக்கெட் வெளியானவுடன், மாணவர்கள் கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றி சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்து அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

  1. மாணவர்கள் முதலில் https://www.cbse.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  2. முகப்புப் பக்கத்தில் தோன்றும் "CBSE Board Exams Class 10 Admit Card" அல்லது "Class 12 Admit Card" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  3. அதில் உங்கள் ரோல் நம்பர் அல்லது கேட்கப்பட்டுள்ள பிற விவரங்களைப் பிழையில்லாமல் உள்ளிடவும்.
  4. விவரங்களைச் சமர்ப்பித்தவுடன் உங்கள் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  5. அதனைத் தரவிறக்கம் செய்து, எதிர்காலத் தேவைக்காக பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கவனிக்க வேண்டியவை

ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ததும், அதில் மாணவரின் பெயர், ரோல் நம்பர், பள்ளி எண், தேர்வு மைய எண், புகைப்படம், பாடங்களின் குறியீடுகள் (Subject Codes), பிறந்த தேதி மற்றும் தேர்வுத் தேதிகள் ஆகியவை சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை அதில் பிழைகள் ஏதேனும் இருப்பின், உடனடியாக பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு சரிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவலைப் பெற: https://www.cbse.gov.in/