டிஜிட்டல் சாதனங்கள் அன்றாட வாழ்வின் முக்கிய மையமாக மாறிவிட்ட நிலையில், கட்டணங்களைச் செலுத்துவது முதல் வகுப்புகளில் கலந்துகொள்வது வரை, குழந்தைகள் திரைகளால் சூழப்பட்ட உலகில் வளர்ந்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் வேலை மற்றும் வீட்டுப் பொறுப்புகளை நிர்வகிக்க முயற்சிக்கும் பெற்றோருக்கு விரைவான தீர்வுகளாக மாறிவிட்டன.

Continues below advertisement

இருப்பினும் குழந்தைகளின் ஆரம்பகால மற்றும் அதிகப்படியான திரைப் பயன்பாடு, அவர்களின் சமூக, உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியைப் பாதிக்கலாம்.

குறையும் கற்பனை வளம்

Continues below advertisement

குழந்தைகள் நீண்ட நேரம் திரைகளில் மூழ்கியிருக்கும்போது, ​​ஆர்வத்தை, கற்பனையை மற்றும் கற்றலை வடிவமைக்கும் நிஜ உலக அனுபவங்களை இழக்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இயற்கையை உற்று நோக்குதல், மற்றவர்களுடன் தொடர்புகொள்வது, விளையாடுவது போன்ற நடவடிக்கைகள் முக்கியமான வாழ்க்கை திறன்களை உருவாக்க உதவுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் ஆரம்ப ஆண்டுகளில் ஸ்கிரீன் நேரத்தைக் கட்டுப்படுத்துவது, அவர்கள் தங்களின் அனுபவங்களை மேலும் சுதந்திரமாக ஆராய அனுமதிக்கிறது.

இந்த சூழலில் குழந்தைகள் டிஜிட்டல் பழக்கங்களை படைப்பாற்றல், கண்டுபிடிப்பு மற்றும் இயற்கையுடன் சமநிலைப்படுத்த உதவும் நடைமுறை வழிகள் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?

1. இயற்கை சார்ந்த வழக்கங்களை அறிமுகப்படுத்துங்கள்:

மாலை நேர நடைப்பயணங்கள், தோட்டம் அமைப்பது அல்லது பூங்காவில் விளையாட்டு போன்ற எளிய பழக்கவழக்கங்கள் குழந்தைகளை நிஜ உலகில் நிலைநிறுத்தும். இந்த நடவடிக்கைகள் இயற்கையான ஆர்வத்தைத் தூண்டி, கவனத்தை மேம்படுத்துகின்றன மற்றும் மொபலில் ஸ்க்ரோல் செய்யும் தூண்டுதலைக் குறைக்கின்றன.

2. கற்றலை ஊக்குவிக்கவும்:

சேமிப்பு பழக்கம் அல்லது சமூகத்துக்காக சிறிய நிதி திரட்டும் முயற்சிகளில் பங்கேற்பது போன்ற கட்டமைக்கப்பட்ட பணிகள் சுயாதீனமான சிந்தனை மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கின்றன. அவை குழந்தைகளை செயலற்ற ஸ்கிரீன் நேரத்திலிருந்து, சிக்கலைத் தீர்க்கும் நிலைக்கு மாற்றுகின்றன.

3. குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்:

ஒன்றாக சமைப்பது, தூங்குவதற்கு முன் படிப்பது அல்லது அன்றாட அனுபவங்களைப் பற்றி விவாதிப்பது உள்ளிட்டவை அர்த்தமுள்ள குடும்ப தருணங்களை உருவாக்குகின்றன. இத்தகைய தொடர்புகள் ஸ்கிரீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதோடு உணர்ச்சிபூர்வமான பிணைப்புகளையும் பலப்படுத்துகின்றன.

4. ரோபோடிக்ஸ் மற்றும் பிற செயல்முறை திட்டங்களை ஆராயுங்கள்:

ரோபோடிக்ஸ் கருவிகள், பில்டிங் பிளாக்குகள் உருவாக்கம் மற்றும் பிற செயல்முறை திட்டங்கள் கற்பனையை நிஜ உலக பயன்பாட்டுடன் இணைக்க குழந்தைகளுக்கு உதவுகின்றன. இந்த திட்டங்கள் படைப்பாற்றல், தர்க்கரீதியான சிந்தனை மற்றும் ஒரு சாதனையின் உணர்வை வளர்க்கின்றன.

5. சுய வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதை ஆதரிக்கவும்:

செஸ் அல்லது கேரம் விளையாட்டுகளில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் ஸ்க்ரீன் பயன்பாட்டைத் தவிர்க்க ஊக்குவிக்கின்றன. பள்ளி வேலைகளுக்கு சில நேரங்களில் ஸ்கிரீன் நேரம் தவிர்க்க முடியாதது என்ற சூழலில், உயர்தர டிஜிட்டல் கருவிகள் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதை பெற்றோர் உறுதி செய்யலாம்.

6. புது மொழி கற்றல் அல்லது பொதுப் பேச்சை அறிமுகப்படுத்துங்கள்:

ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது நினைவாற்றல் மற்றும் கலாச்சாரப் புரிதலை மேம்படுத்துகிறது. பொதுப் பேச்சு குழந்தைகள் தங்களை தெளிவாகவும் நம்பிக்கையுடனும் வெளிப்படுத்த உதவுகிறது - கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி இரண்டையும் வலுப்படுத்தும் திறன்கள் இவை.

குழந்தைகளுக்கு கவனமான, சரியான, முறையான ஸ்கிரீன் பயன்பாட்டை படைப்பு மற்றும் திறன்களை வளர்க்கும் நடவடிக்கைகளுடன் இணைப்பதன் மூலம், பெற்றோர்கள் ஆரோக்கியமான மற்றும் அர்த்தமுள்ள வளர்ச்சியை ஏற்படுத்தலாம்.