"தொழில் கல்வி பயலும் மாணவர்களுக்கு 50,000 ரூபாய் உதவி தொகை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்"

Continues below advertisement

ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்பினை தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியானது, ஒவ்வொரு வருடமும் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும் தலா ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வழங்கப்படுகிறது.

என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் ?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, ஒற்றை சாளர கலந்தாய்வு வழியாக தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கை பெற்றதற்கான சான்று, போஸ்ட் மெட்ரிக் (Post Matric Scholarship) கல்வி உதவித்தொகை மற்றும் 7.5% சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக சேர்க்கை பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்று ஆகியவை வழங்க வேண்டும். 

Continues below advertisement

மேலும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கை பெற்று பயிலும் ஏழை மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும். எனவே அதற்கான வருமான சான்று, மதிப்பெண் சான்று (+2)  தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிட சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்படி தகுதியுள்ள மாணவர்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.