2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவல்களை அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:

’’உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கும் மற்றும் உயர்கல்வி சேர்க்கையினை உறுதி செய்யும் வகையில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் குறித்த விவரங்களை அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் EMIS இணைய தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். (EMIS இணையதளத்தில் பதிவு செய்வதற்கான மாதிரி காணொலி (Demo Video) வழங்கப்பட்டுள்ளது.)

தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்

மாவட்டக்கல்வி ஆசிரியர்கள் பதிவிடக்கூடிய தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இனி வரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்கல்வி சேர்க்கையினை உறுதி செய்ய வழிவகுக்கும். ஆகவே, வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களின் விவரங்களை முழுமையாகப் பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்கள் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதனை தலைமையாசிரியர்கள் வாயிலாக உறுதி செய்திடமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.