Harvard University Free Data Science Courses: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இலவசமாக பயிலக்கூடிய டேட்டா சைன்ஸ் தொடர்பான 7 பாடப்ப்ரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹார்வார்டில் இலவச பயிற்சி:
சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ஒன்று. தற்போது அங்கு ஆன்லைன் வழியாக டேட்டா சைன்ஸ் தொடர்பான 7 பாடப்பிரிவுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியானது 8 முதல் 9 வாரங்களுக்கு நீளும் எனவும், வாரத்திற்கு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை படிக்க வேண்டி இருக்கும் எனவும் கூறப்பட்டுல்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை அணுகி விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், வரும் ஜுன் 17ம் தேதி வரை இதற்கான அவகாசம் இருப்பதாகவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சிக்கான பாடப்பிரிவுகள்..
இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ள பாடப்பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் விசுவலைசேஷன், இன்ஃப்ரென்ஸ் மற்றும் மாடலிங், கேசுவல் டையக்ராம்ஸ்: Define Your Hypotheses Before Drawing Conclusions, கேப்ஸ்டோன், பயிற்சிகளில் டிஜிட்டல் ஹுமானிட்டிஸ்: From Research Questions to Results, ப்ராபப்ளிட்டி மற்றும் லினியர் ரெக்ரெஷன் ஆகியவை அடங்கும்.
டேட்டா சைன்ஸ்: பாடப்பிரிவு விவரங்கள்
1. டேட்டா சைன்ஸ்: இன்ஃப்ரென்ஸ் மற்றும் மாடெலிங்
பயனுள்ள கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்குப் பயனுள்ள புள்ளிவிவர முறைகளை உருவாக்க இன்ஃப்ரென்ஸ் மற்றும் மாடலிங்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்தப் பாடப்பிரிவு விளக்குகிறது
2. கேசுவல் டையக்ராம்ஸ்: Define Your Hypotheses Before Drawing Conclusions
இந்தப் பாடத்தின் முதல் பகுதி, கேசுவல் டயக்ராம்களின் கொள்கைகளையும், காரண-காரிய இன்ஃப்ரென்ஸ் சூழலில் அவற்றின் பயன்பாட்டையும் விளக்கும் ஐந்து பாடங்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி, வழக்கு ஆய்வுகள் மூலம், சுகாதாரம் மற்றும் சமூக அறிவியலில் நிஜ உலக சூழ்நிலைகளுக்கு கேசுவல் டயக்ராம்ஸ் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிரூபிக்கிறது.
3. டேட்டா சைன்ஸ்: கேப்ஸ்டோன்
இது இரண்டு வார சிறப்புப் பாடமாகும், வாரத்திற்கு 15 முதல் 20 மணிநேரம் வரை தேவைப்படும். இந்த கேப்ஸ்டோன் திட்டத்தின் மூலம், மாணவர்கள் பாடத் தொடரின் போது கற்றுக்கொண்ட R தரவு பகுப்பாய்வு அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
4. நடைமுறையில் டிஜிட்டல் மனிதநேயம்: ஆராய்ச்சி கேள்விகள் முதல் முடிவுகள் வரை
இந்தப் பாடத்திட்டத்தில், கல்வி ஆராய்ச்சியின் தேவைகளின் அடிப்படையில் சர்ச் இன்ஜினின் கூறுகளில் மாணவர்கள் பணியாற்றுகிறார்கள். டிஜிட்டல் மனிதநேயத்தின் அடித்தளமாகக் கருதப்படும் அடிப்படை உரை பகுப்பாய்வு நுட்பங்களைப் பற்றிய புரிதலும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
5. டேட்டா சைன்ஸ்: ப்ராபப்ளிட்டி
இந்தப் பாடப்பிரிவானது சீரற்ற மாறிகள், சுதந்திரம், மான்டே கார்லோ சிமுலேஷன்ஸ், எதிர்பார்க்கப்படும் மதிப்பு, நிலையான பிழை மற்றும் மைய வரம்பு தேற்றம் போன்ற முக்கியமான புள்ளிவிவரக் கருத்துக்களை அறிமுகப்படுத்துகிறது.
6. டேட்டா சைன்ஸ்: லீனியர் ரிக்ரெஷன்
இந்தப் பாடப்பிரிவானது, R ஐப் பயன்படுத்தி லீனியர் ரிக்ரெஷனை எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் நிஜ உலக சூழ்நிலைகளில் குழப்பமான காரணிகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதைக் கற்பிக்கிறது.
7. டேட்டா சைன்ஸ்: விசுவலைசேஷன்
ggplot2 தொகுப்பைப் பயன்படுத்தி டேட்டா விசுவலைசேஷன் கொள்கைகளைக் கற்பிக்கிறது