கரூரில் அரசுப் பள்ளியில் கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி மகிழ்ந்த ஆசிரியர்கள்.


 




 


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் காலணியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகளை எடுத்து வந்தனர். 


 




 


நேற்று இறுதி நாள் என்பதால் யூ.கே.ஜி படித்த 10 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு அங்கி அணிவித்தும், தொப்பி அணிவித்தும் பட்டமளிக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பட்டமளிப்பு உடை அணிந்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் அணிவித்து பாராட்டினார். 


 




 


இதனை பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ, மாணவிகள் கைதட்டி பட்டம் பெற்றவர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். அரசுப் பள்ளியில் கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தியது, அரசுப் பள்ளிகளிலும் தனியாருக்கு இணையாக அனைத்தும் இருப்பதை வெளிக்காட்டவே நடத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலை வகுப்பு பள்ளியில் 20 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா.



கரூர் வஞ்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 07.04.2023 மாலை 20 வது ஆண்டு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் திவ்யா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் நாடக நிகழ்ச்சி பல்வேறு வண்ண உடைகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிரமிப்பை ஏற்படுத்தினர். இந்த சிறப்பு நிகழ்ச்சியின் முன்னிலை பொறுப்பை பள்ளியின் தாளாளர் எண் மணிராஜ் அவர்களும் இந்த சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பள்ளியின் முதல்வர் உஷா அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர் பெருமக்களும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபு சங்கர் கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான  இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,


தமிழகத்தில் ஏற்கனவே 26 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் நடைபெற்று வருகிறது நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்ததன் அடிப்படையில் வருகின்ற கல்வியாண்டு முதல் கரூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்க உள்ளது. இந்தப் பள்ளி 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் நடைபெற உள்ளது. இப்பள்ளியில் 400 மாணவர்களும் 400 மாணவியர்களும் தங்கும் விடுதி வசதியுடன் செயல்பட உள்ளது. இப்பள்ளியில் 19 முதுகலை ஆசிரியர்களும் 10 பட்டதாரி ஆசிரியர்களும் பணிபுரிந்து பாடங்களை நடத்த உள்ளார்கள். அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக அமைக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்களை தவிர உயர்கல்வி படிப்பதற்கான போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் குறிப்பாக எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழக அரசு இப்பள்ளியை நடத்த உள்ளது. அதற்காக மாயனூர் ஆசிரியர் பயிற்சி  மைய வளாகத்தில் கரூர் அரசு மாதிரி பள்ளி நடத்துவதற்கு ஏதுவாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கீதா, மாதிரி பள்ளி மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.தீனதயாளன். கரூர் மாவட்ட மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி விஜயலட்சுமி கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் திரு. மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.