Kalvi TV: கல்வி டிவியில் இனி அரசு போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள்; காண்பது எப்படி?

தமிழ்நாடு அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, யூபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Continues below advertisement

அரசே நடத்தும் தொலைக்காட்சி

தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறது. இதில் பல்வேறு ஆசிரியர்கள் கருத்தாளர்களாகப் பங்குபெற்று, தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

பாடப்பொருள்‌ உள்ளுறைப்‌ பயிற்சி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின்‌ கீழ்‌ கல்வி தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. தினந்தோறும்‌ மாணவர்களுக்குப்‌ பாடப்பொருள்‌ உள்ளுறைப்‌ பயிற்சிகளை கல்வி தொலைக்காட்சி வழங்கி வருகிறது, அதேபோல தமிழ்நாடு அரசு தேர்வாணையப்‌ பணிகளுக்கான பயிற்சிகளையும்‌ அளிக்கிறது.

ஒன்றிய அரசு நடத்தும்‌ போட்டித்‌ தேர்வுகளை‌ மாணவ - மாணவிகள்‌ எதிர்கொள்ளும்‌ வகையில்‌ பல்வேறு பயிற்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம்

தமிழ்நாடு அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, யூபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி தொலைக்காட்சியிலும் பயிற்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

மேலும்‌ இது குறித்த கால அட்டவணை தொடர்பான விவரங்களை அறிய www.tamilnaducareersericestn.gov.in என்ற இணையதளத்தைத்‌ தொடர்பு கொள்ளவும்‌.

Continues below advertisement
Sponsored Links by Taboola