கல்விக்கு முக்கியத்துவம்

தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நவீன காலத்தில் அதற்கு ஏற்றார் போல கல்வியிலும் மாற்றங்கள் உருவாகிவருகிறது. இதன் படி பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், கலை அறிவியல் கல்லூரியிலும் மாணவர்கள் அதிகளவு போட்டி போட்டு சேர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.

Continues below advertisement

இதில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 சேர்க்கை இடங்களானது தற்போது உள்ளது. இந்த பாடப்பிரிவில் சேர  2026-27ம் கல்வியாண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மே மாதம் முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதில் அரசு கல்லூரியில் மொத்தமுள்ள 1,26,959 இடங்களுக்கு சுமார் 2,72,632 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.எனவே சுமார் ஒரு லட்சத்து 50ஆயிரத்திற்றும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையானது உள்ளது. 

கல்லூரியில் கூடுதல் மாணவர் சேர்க்கை

இந்த நிலையில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கக்கூடிய பாடப்பிரிவுகளில் கூடுதல் இடங்களை சேர்க்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது . அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் அறிவியல் உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகளில் 20 சதவிகித இடங்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் 15 சதவிகித இடங்களும், சுயநிதி தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் 10 சதவிகித இடங்களையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த புதிய உத்தரவின் படி  கூடுதலாக சேர்க்கப்பட்ட  மாணவர்கள் விவரங்களை அரசுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement