வதோதராவில் கதி சக்தி விஷ்வ வித்யாலயா (Gati Shakti Vishwavidyalaya (GSV)) நிறுவனத்தில் (முன்னதாக தேசிய ரயில், போக்குவரத்து நிறுவன பல்கலைக்கழகம்) பயிற்சி படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அற்விக்கப்பட்டுள்ளது. 


ரயில்வே பல்கலைக்கழகம்:


மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை தொடங்க உள்ளது. ரயில்வே துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்க கூடும். பிளஸ் 2 முடித்தவுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.  


 நாட்டிலேயே முதல் ரயில்வே பல்கலைக்கழகமாக 2018-இல் தொடங்கப்பட்டது இது. போக்குவரத்து தொடர்பான கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி ஆகியவை இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் உள்ள புதுமைகள், அது தொடர்பான அறிவு,  ஆராய்ச்சி முன்னேற்றங்கள் ஆகியவை சார்ந்து பயிலும் வாய்ப்பு இங்குள்ளது.  இங்கு படித்தால் மாணவர்கள் ரயில்வே துறையில் நல்ல அறிவைப் பெறுவதோடு, வேலை கிடைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.


என்னென்ன படிப்புகள்:


இரு பாலரும் தங்கிப் படிக்க நவீன விடுதிகள், 100 சதவீதம் வரையிலும் உதவித்தொகை, யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. ஆகிய கல்வி அமைப்புகளின் வழிகாட்டுதல்களுடன் ரயில்வே பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இது கதி சக்தி விஷ்வவித்யாலயா என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 


இந்தப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், எம்.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


பொறியியல் பிரிவில் பி.டெக், ரயில் பொறியியல் நான்கு ஆண்டு படிப்புகள், , பி. டெக். ரயில் உள்கட்டமைப்பு பொறியியல் (4 ஆண்டு), பி.டெக். ரயில் அமைப்புகள் மற்றும் தொடர்பு பொறியியல் (4 ஆண்டு), பி.டெக். இயந்திர மற்றும் ரயில் பொறியியல் (4 ஆண்டு) ஆகிய இளங்கலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.


எம்.பி.ஏ. ரெகுலர் ப்ரோகிராமில் Logistics and Supply Chain Management, Ports and Shipping Logistics ஆகிய முதுகலை படிப்புகளும் உள்ளன. 


இதோடு, எம்.பி.ஏ. படிப்பு வேலை செய்து வருபவர்களுக்கும் 2 ஆண்டு படிப்பும் உள்ளது.  Logistics & Supply Chain Management, Multimodal Transportation, (Metro Rail Management ஆகிய எம்.பி.ஏ. படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி: 



  • இளங்கலைப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • முதுகலைப் படிப்பில் சேர இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  •  55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

  • ஓ.பி.சி., பழங்குடியின / பட்டியலின மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். 

  • இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 25 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும்முறை:


பி.டெக் தேர்வு திட்டங்கள் ஜே.இ.இ. மெயின் தேர்வு 2024- ல் பெறப்பட்ட மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டிருக்கும். என்.ஆர்.டி.ஐ பி.ஜி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் முதுநிலை பாடத்தில் சேர்க்கை பெறலாம்.


எம்.பி.ஏ.  CUET-PG2024/CAT/MAT/XAT நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும்.


மாணவர்கள் எண்ணிக்கை:


இளங்கலை பொறியியல் படிப்பிற்கு 60 பேர், எம்.பி.ஏ. பிரிவில் ஒவ்வொரு படிப்பிலில் 30 பேர், வேலைக்கு சென்றுகொண்டே எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்கள் ஒவ்வொரு பிரிவுலில் 30 நபர் என மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி? 


https://gsv.ac.in/admission/ - அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 


விண்ணப்ப கட்டணம்:


பொதுப்பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500, பட்டியலின / பழங்குடியின பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.  விண்ணப்பப் படிவம், படிப்புகளுக்கான கட்டணம், கூடுதல் தகவல்களுக்கு https://gsv.ac.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.04.2024