GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: 2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு தற்காலிக விடைக் குறிப்புகளை தற்போது ஐஐடி ரூர்க்கி வெளியிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு தற்காலிக விடைக் குறிப்புகளை தற்போது ஐஐடி ரூர்க்கி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் https://goaps.iitr.ac.in/login என்ற இணைப்பை க்ளிக் செய்து, அவற்றைக் காணலாம்.
முன்னதாக பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கேட் தேர்வு நடைபெற்றது, இந்த நிலையில், தேர்வுக்கான விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது
Just In




கேட் தேர்வு விடைக் குறிப்பை காண்பது எப்படி?
- கேட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் GATE விடைக் குறிப்பு தோன்றும்.
- அதை க்ளிக் செய்யவும்.
- கேட் சேர்க்கை ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- ஆன்சர் கீயைத் தரவிறக்கம் செய்து, வைத்துக் கொள்ளலாம்.
ஆட்சேபனை செய்வது எப்படி?
தேர்வர்கள், கேட் தற்காலிக விடைக் குறிப்புகளை ஆட்சேபனை செய்ய, GOAPS தளத்தைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஒரு கேள்விக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.
ஏற்கெனவே உள்ள அட்டவணைப்படி, மார்ச் 19ஆம் தேதி கேட் தேர்வு முடிவுகள் வெளியாகும். மதிப்பெண் அட்டையை மார்ச் 28 முதல் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். அதற்குப் பிறகு மதிப்பெண் அட்டையைப் பெற ஒவ்வொரு தாளுக்கும் ரூ.500 செலுத்த வேண்டும்.