தாட்கோ மூலம் ஐஐடி பேராசிரியர்கள் வழங்கும் இலவச ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகளுக்கான பயிற்சிக்கு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌  மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 30 மாணவர்களுக்கு இந்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

என்ன தகுதி?

எஸ்சி, எஸ்டி தேர்வர்கள், பிற சமூக மாணவர்கள் 2024- 25ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பிரிவை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பிற பிரிவு மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம்

4 லட்ச ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் இலவச பயிற்சி மையங்கள் செயல்பட உள்ளன.

பயிற்சியின் பயன்கள்

  •  சிறந்த பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்.
  •  தங்கும் இடம் மற்றும் உணவு இலவசம்.
  •  IIT, NIT போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு
  • மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணை.

 

 விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfeoo6wnsgCIQsjLBP1r1zvJiGPdWm2EPTzGGCMhSq9ZNXrqg/viewform என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, ஆண்டு வருமானம், இ- மெயில் முகவரி, தொலைபேசி எண், மாவட்டம், பிரிவு, கோச்சிங் மையம் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.