இலவசப் பெண் கல்வியை அளிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கும் பிரகதி ரூ.50 ஆயிரம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


உயர் கல்வி நிறுவனமான ஏஐசிடிஇ சார்பில் பொறியியல் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பிரகதி என்ற திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2021- 22ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசித் தேதியாக இருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார்.


இந்த கல்வி உதவித்தொகைக்கு பொறியியல் முதல் ஆண்டு மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகையைப் பெற 10, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவிகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். திருமணத்துக்குப் பிறகு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 




பிரகதி உதவித்தொகைக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர் மட்டுமல்லாமல், ஏற்கெனவே இந்தத் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்து, விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 4 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


உதவித் தொகையை வழங்குவதில் எஸ்சி மாணவிகளுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடும், எஸ்டி மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும், ஓபிசி மாணவிகளுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படும்.


விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:


பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
மாணவியின் ஆதார் எண்
வருமானச் சான்றிதழ்
கல்விக் கட்டண நகல்
சாதிச் சான்றிதழ்
கல்லூரி தலைவரிடம் இருந்து சான்றிதழ்


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15 டிசம்பர் 2021


உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்த மேலும்கூடுதல் விவரங்களை https://www.aicte-pragati-saksham-gov.in/resources/combine%20pragati%20&%20saksham%20(1).pdfஎன்ற தளத்தில் அறியலாம்.


பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க: https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண