இதுகுறித்து Fact Check பிரிவில் டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கூறி உள்ளதாவது:
2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - || (தொகுதி Il மற்றும் ॥& பணிகள்) -இல் விரிந்துரைக்கும் வகை (Descriptive type paper), விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
விரிந்துரைக்கும் வகை தேர்வில் தேர்வர்களின் விடைத்தாள்களில் உள்ள ஒவ்வொரு வினாவின் விடையும் பல்வேறு மதிப்பீட்டாளர்களால் (multiple examiners), மதிப்பீடு செய்யப்படுவதால் ஏற்படும் வேறுபாடுகளை (examiner bias), குறைப்பதற்காக, ஒரு தேர்வரின் ஒவ்வொரு வினாவிற்கான விடையும் இரண்டு முறை மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு இரண்டு முறை மதிப்பீடு செய்யப் பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களின் சராசரியே, தேர்வரின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் இரண்டு முறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களுக்கு இடையே 15% சதவீதத்திற்கு மேற்பட்ட வேறுபாடு இருப்பின், தேர்வாணையம் அந்த தேர்வரின் அனைத்து வினாக்களின் விடைகளையும் மூன்றாவது முறை மதிப்பீடு செய்கிறது.
2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு - || (தொகுதி ॥ மற்றும் ॥& பணிகள்) -இல் விரிந்துரைக்கும் வகை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை.
தவறான தகவலை பரப்பாதீர்!
தேர்வாணையத்தின் மீது அவதூறு பரப்புவதையே தொழிலாகக் கொண்டு செயல்படும் சில பயிற்சி மையங்களால் பரப்பப்படும் தவறான தகவல்களை தேர்வர்கள் நம்பவேண்டாம் என
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.