இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. முதுகலை பட்ட படிப்புகள், முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள், பிளஸ் டூ முடித்தவர்கள் நேரடியாக முதுகலை பட்டம் படிக்க உதவும் ஐந்தாண்டுக்கான ஒருங்கிணைந்த முதுகலை படிப்புகள், முதுகலை டிப்ளமோ படிப்புகள் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய அளவில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்புகள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளன.


புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலை, பிஎச்டி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள், பிஎச்டி, முதுநிலைப் பட்டயப் படிப்பு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் இங்கு படித்து வருகின்றனர்.




முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் வரும் செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பம் துவங்கபட்டது.


மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14 கடைசித் தேதியாக இருந்தது. மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஆகஸ்ட் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழத்தில் உள்ள படிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு, தேர்வு முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.


 


Kabul : போராட்டக்களத்தில் ஆப்கன் பெண்கள்..தலிபான்களுக்கு எதிராக ஒலிக்கும் முதல் குரல்


 



 


தமிழகத்தில் சென்னை,கோவை, மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாடு முழுவதுமுள்ள சுமார் 36 நகரங்களில் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளன. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், மாற்றுத் திறனாளிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் மட்டும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் இருபத்தைந்து சதவிகிதம் வரை முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் இணைய முகவரி: www.pondiuni.edu.in மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் இங்கு இலவசமாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


 


 


முதல்வர் ஸ்டாலின் செய்தது புரட்சி: திருமா புகழாரம்